அறந்தாங்கி ஐஎம்ஏ மற்றும் திசைகள் இணைந்து நடத்தும் நீட் தேர்வு பயிற்சி துவக்க விழா




புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இயங்கி வரும் இந்திய மருத்துவ கழகம் மற்றும் திசைகள் மாணவ வழிகாட்டி அமைப்பு இணைந்து நடத்தும் நீட் தேர்வுக்கான 7ம் ஆண்டு சிகரம் இலவச பயிற்சி துவக்க விழா ஐஎம்ஏ தலைவர் மருத்துவர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.

ஐஎம்ஏ பொருளாளர் மருத்துவர் இளையராஜா முன்னிலை வகித்தார்.

திசைகள் அமைப்பு தலைவர் மருத்துவர் தெட்சணாமூர்த்தி பயிற்சியை துவக்கி வைத்து உறையாற்றும்போது, தினமும் குறைந்தது 5 மணிநேரம் 30 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சி 7 வருடங்களாக ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று, இதுவரை 800 மாணவ மாணவிகள்  இலவச நீட் தேர்வுக்கான பயிற்சியில் பயன்பெற்றுள்ளனர். 

இப்பயிற்சியில் பயனடைந்த மாணவர்கள்  இதுவரை 8 பேர் மருத்துவ கல்லூரியில் சேர்ந்துள்ளனர். 

இந்த வருடம் இயற்பியல் ஆசிரியர் சரவணன், வேதியியல் ஆசிரியர் பிரபாகரன், உயிரியில் ஆசிரியர் செல்வக்குமார், இயற்பியல் ஆசிரியர் ராமசாமி, பொது ஆசிரியர் மேகலா ஆகியோர் தினமும் வகுப்பு எடுப்பார்கள் என தெரிவித்தார்.

ஒருங்கிணைப்பாளர்கள் சற்குருநாதன், ரஜினிக்காந்த், கபார்கான் முனைவர் முபாரக் அலி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

முன்னதாக சிகரம் திட்ட ஒருங்கிணைப்பாளர் நல்லாசியர் பாஸ்கரன் அனைவரையும் வரவேற்றார். இறுதியில்  திசைகள் அமைப்பின் பொருளாளர்  முகமது முபாரக் நன்றி தெரிவித்தார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments