தொண்டி கடலோரப்பகுதியில் கண்காணிப்பு பணி




தொண்டி கடலோர பகுதியில் கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் நிலையம் சார்பில் கடலோர பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கண்காணிப்பு பணி (சஜாக் ஆப்ரேஷன்) நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கடலோர பாதுகாப்பு குழும சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன், தனிப்பிரிவு ஏட்டு இளையராஜா, மீன்வளத்துறை ஆய்வாளர் அபுதாஹீர், மீன்வள அமலாக்கத்துறை சப்-இன்ஸ்பெக்டர் குருநாதன், ஆகியோர் கடலில் 12 டன் படகில் கூட்டுரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அதன் அடிப்படையில் கடலோர பாதுகாப்பு குழும கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் நேற்று தொண்டி கடற்கரை போலீஸ் நிலையத்தை நேரில் ஆய்வு செய்தார். அப்போது கடலில் கடலோரப் பாதுகாப்புக் குழும போலீசாரின் ரோந்து பணியையும் அவர் ஆய்வு செய்தார். பின்னர் தொண்டி அருகே உள்ள சோளியக்குடி கடற்கரை கிராமத்திற்கு சென்று அங்குள்ள ஜெட்டி பாலத்தில் படகுகளை ஆய்வு செய்தார்.

அப்போது கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அய்யனார், தனிப்பிரிவு ஏட்டு இளையராஜா உள்பட பலரும் உடன் சென்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments