முத்துப்பேட்டை அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை அறந்தாங்கி வழியாக இயங்கிய செகந்திராபாத்- ராமநாதபுரம் வாராந்திர சிறப்பு ரயிலை மீண்டும் இயக்க பரிசீலனை




செகந்திராபாத் -ராமநாதபுரம் செகந்திராபாத் (07695/07696) வாராந்திர சிறப்பு ரயில்கள் சிதம்பரம், சீர்காழி, திருவாரூர் வழியாக இயக்கப்பட்டன. இதில், செகந்திராபாத் ரயில் (07695) செகந்திராபாத்தில் இருந்து, இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் இரவு 11.45 மணிக்கு ராமநாதபுரம் சென்றடையும். மறுவழித்தடத்தில், ராம நாதபுரம்- செகந்திராபாத் ரயில் (07696) ராமநாதபுரத்தில் இருந்து, காலை 9.50 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மதியம் 12.50 மணிக்கு செகந்திரா பாத் சென்றடையும்.

இந்தரயில்கள் நிர்வாக காரணங்களுக்காக பிப்ரவரி 2-வது வாரத் தில் நிறுத்தப்பட்டுவிட்டன. 

இதற்கு வியாபாரிகள், வர்த்தக அமைப் பினர், பொதுமக்கள் கடும் கண் டனம் தெரிவித்ததுடன் இந்த ரயில் களை இயக்க கோரிக்கை
விடுத்து வந்தனர். 


இந்நிலையில், செகந்திராபாத்
ராமநாதபுரம் ரயிலை மீண்டும் இயக்குவதற்கு பரிசீலனை செய் யப்பட்டு வருகிறது.

இதற்காக ரயில்வே வாரிய அதிகாரிகள் ஆலோசனை நடத்தி யுள்ளனர்.

விரைவில், நடைமுறைக்கு வரவுள்ள கோடைகால சிறப்பு ரயில்கள் குறித்த அறிவிப்பின் போது, செகந்திராபாத்- ராமநாதபுரம் வாராந்திர ரயில் இயக்கம் குறித்தும் அறிவிக்கப்படும் என ரயில்வே துறையினர் தெரிவித்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments