கோபாலப்பட்டிணத்தில் 2024 மக்களவை தேர்தல் வாக்குபதிவில் ஆண்களை விட பெண்கள் டாப்!



கோபாலப்பட்டிணத்தில் 2024 மக்களவை தேர்தல் வாக்குபதிவில் ஆண்களை விட பெண்கள் முந்திச்சென்றனர். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பெண்கள் அதிகமாக வாக்களித்ததின் அடிப்படையில் கோபாலப்பட்டிணத்தை பொறுத்தமட்டில் வெற்றியை தீர்மானிப்பது பெண்களாக தான் இருக்கின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி இராமநாதபுரம் மக்களவைத் தொகுதி ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் 2024 மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு 19/04/2022 வெள்ளிக்கிழமை காலை 7.00 மணியளவில் துவங்கி மாலை 6.00 மணி வரை அமைதியான முறையில் விறுவிறுப்பாக நடைபெற்றது.

இந்நிலையில் கோபாலப்பட்டிணத்தில் ஆண்களை விட பெண்கள் தான் அதிகமாக வாக்கு செலுத்தி உள்ளனர். 1872 மொத்த பெண் வாக்காளரில் 1354 வாக்களித்து உள்ளனர்.வாக்கு சதவிகித அடிப்படையில் பார்க்கையில் 72.32% பேர் வாக்களித்து உள்ளனர். ஆண் மொத்த வாக்காளர் 1757 பேரில் 950 வாக்களித்து உள்ளனர். வாக்கு சதவிகித அடிப்படையில் பார்க்கையில் 54.06% பேர் வாக்களித்து உள்ளனர். இதன் மூலம் 18.26% பெண்கள் ஆண்களை விட பெண்கள் அதிகமாக வாக்களித்து உள்ளனர்.

கோபாலப்பட்டிணத்தில் காலை 7 மணி முதலே மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. பகல் ஒரு மணிக்கு மேல் வாக்குப்பதிவு திடீரென மந்தமானது. கோடை வெயில் கொழுத்தியதால், வாக்காளர்கள் வீடுகளிலேயே முடங்கினர். இந்நிலையில் வெயில் சற்று குறைந்தும், வாக்குப்பதிவு நேர இறுதியில் வாக்குச்சாவடிகளில் கூட்டம் நிரம்பி காணப்பட்டது. வாக்காளர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். இதில் ஆண்கள், பெண்கள் தனித் தனியாக நீண்ட வரிசையில் காத்திருந்து ஓட்டு போட்டனர்.

2024 மக்களவை தேர்தலில் கோபாலப்பட்டிணத்தில் பதிவான வாக்கு விபரம் :

கோபாலப்பட்டிணத்தில் மொத்தம் 3629 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 1757 பேரும்,பெண்கள் 1872  பேரும் அடங்குவர்.

கோபாலப்பட்டிணம் வாக்குச்சாவடியில் மொத்தம் 2305 (63.51%) வாக்குகள் பதிவானது. இதில் ஆண்கள் 950 (26.17%) வாக்குகளும், பெண்கள் 1354 (37.31%) வாக்குகளும் செலுத்தினர்.

வார்டு வாரியாக விபரம்:

பாகம் எண் -149

ஆண்

பெண்

மொத்த வாக்கு982

512

470

பதிவான வாக்கு - 614

255

359

சதவிகிதம் – 62.52%

25.96%

36.56%


பாகம் எண் -150

ஆண்

பெண்

மொத்த வாக்கு832

383

406

பதிவான வாக்கு - 529

222

307

சதவிகிதம் – 63.58%

26.69%

36.89%


பாகம் எண் -151

ஆண்

பெண்

மொத்த வாக்கு1001

490

486

பதிவான வாக்கு - 631

268

362

சதவிகிதம் – 63.03%

26.87%

36.16%


பாகம் எண் -152

ஆண்

பெண்

மொத்த வாக்கு814

372

438

பதிவான வாக்கு - 531

205

326

சதவிகிதம் – 65.23%

25.18%

40.05%


கடந்த 2019  மக்களவை தேர்தலில் 58.84% பதிவானது. இந்த தேர்தலில் 63.51% வாக்குகள்  பதிவாகியுள்ளது. கடந்த தேர்தலை விட 4.67% வாக்குகள் கூடுதலாக பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆண்களை விட அதிகமாக பெண்கள் அனைத்து வாக்குச்சாவடிகளில் பெண்கள் தான் அதிகமாக வாக்களித்து டாப்பில் உள்ளனர். இதன் மூலம் கோபாலப்பட்டிணத்தை பொறுத்தமட்டில் வெற்றியை தீர்மானிப்பது பெண்களாக உள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments