வாக்காளர்கள் அடையாள அட்டை இல்லையா வாக்களிக்க இந்த 12 ஆவணங்களில் ஒன்று போதும் முழு விவரம்




வாக்காளர்கள் அடையாள அட்டை இல்லையா வாக்களிக்க இந்த 12 ஆவணங்களில் ஒன்று போதும் முழு விவரம்

தமிழகம் முழுவதும் வாக்காளா்களுக்கு ‘பூத் சிலிப்’ (வாக்குச்சாவடி தகவல் சீட்டு) விநியோகிக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகின்றது, இந்நிலையில் பூத் சிலிப்பை அடையாள அட்டையாக பயன்படுத்த முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆதார் அட்டை உள்பட 12 ஆவணங்களை பயன்படுத்தி வாக்களிக்கலாம்.  என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது


வாக்காளர் விவரங்களுடன் தற்போது வாக்காளரின் புகைப்படமும் பூத் சிலிப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. வாக்காளர் புகைப்படத்துடன் பூத் சிலிப் விநியோகம் செய்யப்படும். வாக்காளர் அடையாள அட்டையில் வாக்காளரின் பெயரில் சிறிய அளவில் எழுத்துப் பிழைகள் இருந்தால் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

மேலும் பூத் ஸ்லிப் இல்லை என்றாலும் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் வாக்களிக்கலாம் அதேபோல் வாக்காளர் அட்டை இல்லாவிட்டாலும் ஆதார் உள்ளிட்ட 12 ஆவணங்களில் ஒன்றை பயன்படுத்தி வாக்களிக்கலாம்

இந்த பூத் சிலிப்பில் வாக்காளரின் பெயா், பாலினம், வாக்காளா் அடையாள அட்டை எண், வாக்காளா் பட்டியலில் வரிசை எண், பாகம் எண், வாக்குச் சாவடியின் பெயா் ஆகிய விவரங்கள் பூத் சிலிப்பின் முன்பக்கத்தில் இடம்பெற்றுள்ளன

மேலும் பூத் சிலிப் என்பது, வாக்களிப்பதற்கான அடையாள ஆவணம் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. வாக்காளா் அடையாள அட்டை அல்லது இந்தியத் தோ்தல் ஆணையத்தில் வரையறுக்கப்பட்ட 13 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை கண்டிப்பாக எடுத்து வர வேண்டும் என்று பூத் சிலிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் வாக்களிக்க தேவையான ஆவணங்கள் அறிவிப்பு  12ஆவணங்கள் பட்டியல்  

வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட 12 அடையாள அட்டைகளில் ஒன்றைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம் என்று கூறியுள்ளது தேர்தல் ஆணையம் 

1. ஆதார் அட்டை

2. ஓட்டுநர் உரிமம்

3. பான்கார்டு

4. ரேஷன் அட்டை

5. பாஸ்போர்ட்

6. புகைப்படத்துடன் கூடிய பென்சன் ஆவணம்

7.புகைப்படத்துடன் கூடிய மத்திய, மாநில அரசு ஊழியர் அடையாள அம்டை

8. எம், எம்எல்ஏ, எம்எல்சி அதிகாரப்பூர்வ அடையாள அட்டை

9. அங்கீகரிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி சான்றிதழ்

10. வங்கி மற்றும் அஞ்சல் பாஸ்புக்

11. மத்திய அரசின் வேலைவாய்ப்பு அடையாள அட்டை

12. தொழிலாளர் அமைச்சகத்தின் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட சுகாதார காப்பீட்டு ஸ்மார்ட் கார்டு

தேர்தலில் வாக்களிக்க பூத் ஸ்லிப்பை அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையாக கருத முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பூத் ஸ்லிப்பில் வாக்காளர் பெயர், வாக்காளர் பட்டியலில் உள்ள வரிசை எண், வாக்குச்சாவடி விவரம் இடம் பெற்றிருக்கும். தற்போது வாக்காளரின் புகைப்படமும் பூத் ஸ்லீப்பில் சேர்க்கப்பட்டுள்ளது.ஆனால், இதனை வாக்காளர் அடையாள அட்டையாக பயன்படுத்த முடியாது என்று கூறியுள்ளது. 
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments