அடுத்த ஆண்டு யூரியா இறக்குமதி நிறுத்தப்படும் மத்திய மந்திரி தகவல்




மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்திய விவசாயத்துக்கு உரங்களின் இருப்பு மிகவும் முக்கியமானது. பயிர் உற்பத்தியை அதிகரிக்க நாடு கடந்த 60-65 ஆண்டுகளாக ரசாயன உரங்களைப் பயன்படுத்துகிறது.இப்போது, நானோ திரவ யூரியா மற்றும் நானோ திரவ டி-அம்மோனியம் பாஸ்பேட் போன்ற மாற்று உரங்களை ஊக்குவிக்கும் முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. மாற்று உரங்களைப் பயன்படுத்துவது பயிர்கள் மற்றும் மண் ஆரோக்கியத்திற்கு நல்லது. நாங்கள் அதை ஊக்குவித்து வருகிறோம்.யூரியா இறக்குமதியைச் சார்ந்திருப்பதை முடிவுக்குக் கொண்டு வர மோடி அரசாங்கம் இரு முனை உத்தியைக் கடைப்பிடித்துள்ளது. மூடப்பட்ட 4 யூரியா ஆலைகளுக்கு அரசாங்கம் புத்துயிர் அளித்துள்ளது.இதன் மூலம் நாட்டில் யூரியா இறங்குமதி தொடர்ந்து குறைந்து வருகிறது. 2021-2022 நிதியாண்டில் யூரியா இறக்குமதி 91.36 லட்சம் டன்னிலிருந்து 2022-23-ம் நிதியாண்டில் 75.8 லட்சம் டன்னாகக் குறைந்துள்ளது. 2025-ம் ஆண்டின் இறுதியில் இந்தியா யூரியாவை இறக்குமதி செய்வதை நிறுத்தும்.

இவ்வாறு மன்சுக் மாண்டவியா கூறினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments