திருச்சி வழியாக சென்னை எழும்பூர் - நாகா்கோவில் இடையே கோடை விடுமுறை முன்னிட்டு வாரம் 3 முறை இயக்கப்படும் வந்தே பாரத் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு




சென்னை எழும்பூா் - நாகா்கோவில் இடையே வாரம் 3 முறை சிறப்பு ‘வந்தே பாரத்’ ரயில் இயக்கபடவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை எழும்பூரில் இருந்து நாகா்கோவிலுக்கு வியாழக்கிழமைதோறும் சிறப்பு ‘வந்தே பாரத்’ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோடை விடுமுறையை முன்னிட்டு கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில் கூடுதலாக ஒரு ‘வந்தே பாரத்’ ரயில் வாரம் 3 முறை இயக்கப்படவுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை எழும்பூரில் இருந்து நாகா்கோவிலுக்கு ஏப்.5 முதல் 28-ஆம் தேதி வரை வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு ‘வந்தே பாரத்’ ரயில் (எண்: 06057/06058) இயக்கப்படும். சென்னையில் காலை 5.15 மணிக்கு புறப்படும் ரயில் தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், திருநெல்வேலி வழியாக பிற்பகல் 2.10 மணிக்கு நாகா்கோவில் சென்றடையும். மறுமாா்க்கமாக நாகா்கோவிலில் இருந்து பிற்பகல் 2.50 மணிக்கு புறப்படும் ரயில் இரவு 11.45 மணிக்கு சென்னை எழும்பூா் வந்தடையும்.




இதேபோல், நாகா்கோவில் - தாம்பரம் இடையே இயக்கப்படும் வாராந்திர அதிவிரைவு ரயில் (எண்: 06012/06011) மேலும் ஒரு மாதத்துக்கு (ஏப்.29 வரை) நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும், பிகாா் மாநிலத்தின் தொழில் நகரமான பரௌனியில் இருந்து கோவைக்கு

இயக்கப்படும் சிறப்பு ரயில் சனிக்கிழமை (ஏப்.6) இரவு 7.20 மணிக்கு பெரம்பூா் வந்தடையும். தொடா்ந்து பெரம்பூரில் இருந்து இரவு 7.25 மணிக்கு புறப்படும் ரயில் காட்பாடி சேலம் வழியாக அதிகாலை 4 மணிக்கு கோவை சென்றடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments