கோபாலப்பட்டிணத்தில் கடலோர பகுதியில் குப்பை கொட்டுக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை வழக்கு தீர்ப்பு படி ஆவுடையார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர் நாட்டானிபுரசக்குடி ஊராட்சி மன்ற தலைவருக்கு சுற்றறிக்கை



கோபாலப்பட்டிணத்தில் கடலோர பகுதியில் குப்பை கொட்டுக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை வழக்கு தீர்ப்பு படி ஆவுடையார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர் நாட்டானிபுரசக்குடி ஊராட்சி மன்ற தலைவருக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

கோபாலப்பட்டிணத்தில் கடலோர பகுதியில் குப்பை கொட்டுக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை வழக்கு தீர்ப்பு படி

ஆவுடையார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர் நாட்டானி புரசக்குடி ஊராட்சி மன்ற தலைவருக்கு சுற்றறிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது,

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் ஊராட்சி ஒன்றியம், நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட கோபாலப்பட்டிணத்தில் கடலோரம் குப்பை கொட்டுவது தொடர்பாக சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கு எண்.W.P(MD)No2760/2024 * 27.02.2024-டி கடலோர முகத்துவாரத்தின் எந்த பகுதியிலும் குப்பைகள் கொட்டக்கூடாது என திர்ப்புரை பகிரப்பட்டுள்ளது.
 
ஆனால் ஆவுடையார்கோயில் ஊராட்சி ஒன்றிய இளநிலை பொறியாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் கள ஆய்வு செய்த போது தடை செய்யப்பட்ட பகுதிகளில் குப்பை கொட்டி இருப்பது தெரிகிறது. எனவே, அக்குப்பைகளை அகற்றிடவும், மேலும் குப்பைகளை கொட்டாமல் பாதுகாத்திடவும் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு நாட்டாணி புரசக்குடி ஊராட்சி மன்ற தலைவரை கேட்டுக்கொள்ளப்படுகிறார். இவ்வாறாக கூறப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments