கோபாலப்பட்டிணம் காட்டுக்குளம் 4 ரோடு சந்திப்பு அருகே சாலையில் ஊர்ந்து சென்ற விஷ பாம்பு - இரவு நேரங்களில் பொதுமக்கள் கவனமாக செல்ல அறிவுறுத்தல்




கோபாலப்பட்டிணம்  காட்டுக்குளம்  4 ரோடு சந்திப்பு அருகே சாலையில் ஊர்ந்து சென்ற விஷ பாம்பு - இரவு நேரங்களில் பொதுமக்கள் கவனமாக செல்ல அறிவுறுத்தபடுகிறார்கள்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஒன்றியம், நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து கோபாலப்பட்டிணத்திற்கு செல்லும் பிரதான சாலை காட்டுக்குளம் சாலை அமைந்துள்ளது. கோபாலப்பட்டிணத்தில் இருந்து மீமிசல் செல்வதற்கும், வெளியூரில் இருந்து கோபாலப்பட்டிணம் கடற்கரை பகுதிக்கு செல்ல இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றன. தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது 

மேலும் காலை மற்றும் மாலையில் ஏராளமான பொதுமக்கள் நடந்தும் சென்று வருகின்றனர்.

தற்போது காட்டுக்குளம்  சுற்றிலும் அடர்ந்த காடு போல செடிகள் வளர்ந்துள்ளது. இந்த நிலையில் இன்று அதிகாலையில் சுமார் 3.30 மணி அளவில் சுமார் 5 அடி நீளம் உள்ள விஷ பாம்பு  சாலையில் ஊர்ந்து சென்றது.

எனவே இரவு நேரங்களில் பொதுமக்கள் கவனமாக செல்ல அறிவுறுத்தபடுகிறார்கள்.

கடந்த சில மாதங்களாக இந்த பகுதியில் தெரு விளக்கு எரியாமல் இருந்த நிலையில் நேற்று தான் தெருவிளக்குகள் சரி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments