கோபாலப்பட்டிணத்தில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கும் பள்ளிவாசல்கள்



கோபாலப்பட்டிணத்தில் நோன்பு பெருநாளையொட்டி பள்ளிவாசல்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மின்னொளியில் ஒளிர்ந்தது.

கோபாலப்பட்டிணத்தில் எப்போதும் நோன்பின் 27-வது இரவு அன்று முதல் பள்ளிவாசல்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும்.

கோபாலப்பட்டிணத்தில் உள்ள பள்ளிவாசல்கள் மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலித்து வருகிறது.

இரவுக்கு ஒளி சேர்க்க குழந்தைகள் எல்லாம் புத்தாடைகளுடன் தெருக்களில் வலம் வந்து கொண்டிருப்பார்கள். பெரியவர்களோ பள்ளிவாசல்களில் லைலத்துல் கத்ர் எனும் மகத்துவமிக்க இரவின் நன்மையை எதிர்பார்த்து இரவு முழுவதும் தொழுகையிலும், வணக்க வழிபாடுகளிலும் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருப்பார்கள்.

ரமலான் மாதம் முழுவதும் ஈத் பெருநாளை எதிர்பார்த்துக் கொண்டிருந்தாலும் 27-ம் நாளன்று பெருநாளுக்கான எதிர்பார்ப்பு உச்ச நிலையை அடைந்து பெருநாள் கொண்டாட்டத்தின் முன்னோட்டமாகவே 27ம் கிழமை மாறிவிடும்.

குறிப்பு: லைலத்துர் கத்ர் என்பது 27-வது இரவு மட்டுமே என்கின்ற தவறான கருத்து இந்தியத் துணைக்கண்டத்திலும் இன்னும் சில நாடுகளிலும் பரவலாக நிலவுகிறது. இந்த கருத்து தவறு என்பதை உணர்ந்து கொள்ள, இதனைப் பற்றிய ஹதீஸ்:

நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு கத்ரின் இரவை அறிவித்துக் கொடுப்பதற்காக வெளியில் வந்தார்கள். அப்போது இரண்டு பேர் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொண்டார்கள். அப்போது நபியவர்கள் கூறினார்கள். லைலத்துல் கத்ரின் இரவை உங்களுக்கு அறிவித்துக் கொடுப்பதற்காக நான் வெளியாகி வந்தேன். இரண்டு பேர் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டதின் காரணமாக அல்லாஹ் அதைப் பற்றிய செய்தியை உயர்த்தி விட்டான் என்றுகூறி அது உங்களுக்கு நலமாக இருக்கக் கூடும் என்றார்கள். ஆகவே அதை இருபத்தி ஒன்று, இருபத்தி மூன்று, இருபத்தி ஐந்து, இருபத்தி ஏழு, இருபத்தி ஒன்பது ஆகிய நாட்களில் தேடிப்பெற்றுக் கொள்ளுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி

எனக்கு லைலத்துல் கத்ர் இரவு காண்பிக்கப்பட்டது. பின்னர் அது எனக்கு மறக்கடிக்கப்பட்டுவிட்டது. எனவே நீங்கள் கடைசி பத்து நாட்களின் ஒற்றைப்படை இரவுகளில் அதை தேடுங்கள்! அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித்(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்

நிச்சயமாக நாம் அதை(குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம். மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது? கண்ணியமிக்க(அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக்க மேலானதாகும். அதில் மலக்குகளும், ஆன்மாவம்(ஜிப்ரயீலும்) தம் இறைவனின் கட்டளையின் படி (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன் இறங்குகின்றனர். சாந்தி(நிலவியிருக்கும்) அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும். (அல்குர்ஆன் 97:1,5)









எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments