மீமிசல் அருகே தேர்தலை புறக்கணிப்பதாக பதாகை வைத்ததால் பரபரப்பு





மீமிசல் அருகே தேர்தலை புறக்கணிப்பதாக பதாகை வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அடிப்படை வசதிகள் இல்லை

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் அருகே பொன்பேத்தி ஊராட்சிக்குட்பட்ட இறையாமங்கலம் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சாலை, குடிநீர், மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை என கூறப்படுகிறது.

இதை கண்டித்து அப்பகுதி கிராமமக்கள் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக அப்பகுதியில் பதாகை வைத்துள்ளதாக பரபரப்பு ஏற்பட்டது. மேலும் பொதுமக்கள் தேர்தல் புறக்கணிப்பு என்று எழுதிய பதாகையை கையில் ஏந்தி கொண்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.



தேர்தல் புறக்கணிப்பு

இதுதொடர்பாக அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், குடிநீர் வசதி சரியான முறையில் செய்து தரவில்லை. 10 ரூபாய்க்கு தண்ணீர் விற்பனை செய்யும் குடிநீர் வண்டியும் கூட வரவில்லை என்றால் 2 கிலோ மீட்டர் தூரம் சென்று கண்மாய் தண்ணீரை எடுத்து குடிநீராக பயன்படுத்தி வருகிறோம்.

எங்கள் பகுதியை நேரில் வந்து பார்வையிட்ட சட்டமன்ற உறுப்பினர் கூட அத்திபட்டி கிராமம் போல் உள்ளது என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.

தற்போது வரை இங்கு வந்து எந்த ஒரு நலத்திட்ட பணிகளையும் செய்து கொடுக்கவில்லை. ஆகவே தங்கள் பகுதிக்கு நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக யாரும் ஓட்டு கேட்க வர வேண்டாம் என்று பதாகை வைத்து தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்துள்ளோம் என்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments