கோடை மழை குற்றாலம் அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது




தென் இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

அதன்படி, நேற்று காலையில் தூத்துக்குடி மாவட்டத்தின் பல இடங்களில் மிதமான மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் லேசான மழைநீர் தேங்கி கிடந்தது. உப்பளங்களிலும் மழைநீர் தேங்கியதால், உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது. நேற்று முழுவதும் வானம் மேக மூட்டமாகவே காணப்பட்டது. இதேபோல் நெல்லை மாவட்டத்திலும் நேற்று காலை 10 மணி அளவில் பரவலாக மழை பெய்தது. நெல்லை டவுன், தென்கலம், பள்ளிக்கோட்டை, பணகுடி, வள்ளியூர், ராதாபுரம், காவல்கிணறு சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்தது. இதனால் சாலைகளில் பொதுமக்கள் குடைபிடித்தபடி நடந்து சென்றனர். நேற்று முன்தினம் இரவில் தென்காசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. நேற்று காலையிலும் சிறிது நேரம் மழை பெய்தது. பின்னர் மதியம் பலத்த மழையாக கொட்டியது. இதே நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் பெய்த மழையால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்தொடங்கியுள்ளது.

நேற்று காலையில் இருந்து மெயின் அருவி, ஐந்தருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது. இதனை அறிந்த சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அருவிகளில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments