கோபாலப்பட்டிணத்தில் பெருநாள் ஆலமரம் தோப்பு கண்காட்சி

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டானி புரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல்  அருகே கோபாலப்பட்டிணத்தில் நோன்பு & ஹஜ் பெருநாள் அன்று  ஆண்களுக்கு காலையிலும் (ஆலமரம்), பெண்களுக்கு மாலையிலும் (தோப்பு) காலம் காலமாக நடைபெற்று வருகிறது..

இதில் நண்பர்கள் உறவினர்களுடன் சென்று ஆண்கள் பெண்கள் சந்தித்து  
மகிழ்ச்சி அடைந்து வருகிறார்கள்..

முதல் பெருநாள் - தலை பெருநாள் என்றும் இரண்டாவது பெருநாள் ஊசி பெருநாள் என்றும் கோபாலப்பட்டிணம் மக்கள் அழைத்து வருகின்றனர்..

ஆண்களுக்கு காலம் காலமாக பெருநாள் கண்காட்சி கடற்கரை பள்ளிவாசல் வளாகத்தில் உள்ள ஆலமரத்தடியில்  பெருநாள் தோப்பு நடைபெற்று வருகிறது.

2015 முன்பு பெண்களுக்கு

2015 முன்பு வரை பெண்களுக்கு பெருநாள் கண்காட்சி பழைய காலணி பின்புறம் இருக்கும் அரண்மனை தோப்பு நுழைவு பகுதியில் உள்ள இடங்களில் பெருநாள் தோப்பு நடைபெற்று வந்தது. 2015 ஆம் ஆண்டு கோபாலப்பட்டிணத்தில் கீரீன் பார்க் மைதானத்தில் மாவட்ட இஜ்திமா பிப்ரவரி 03 04 நடைபெற்றது. இதற்கு பொதுமக்கள் கலந்து கொள்ளுவதற்காக இடம் கடற்கரை வரை நீட்டிப்பு செய்யப்பட்டது..பின்பு இந்த இடத்திற்கு ஈத்கா மைதானம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

2015‌ முதல் பெண்களுக்கு

2015 முதல் பெண்களுக்கு பெருநாள் கண்காட்சி ஈத்கா மைதானத்தில்  பெருநாள் தோப்பு நடைபெற்று வருகிறது.

நோன்பு பெருநாள் கண்காட்சி எத்தனை நாட்கள் ?

கோபாலப்பட்டிணத்தில் நோன்பு பெருநாள் கண்காட்சி 2015 முன்பு இரண்டு நாட்கள் நடைபெற்று வந்தது ஆறு நோன்பு பெருநாள் ஒரு நாள்  நடைபெற்று வந்தது

2015 பின்பு மூன்று நாட்கள் நடைபெற்று வருகிறது ஆறு நோன்பு பெருநாள் இரண்டு நாட்கள்  நடைபெற்று வருகிறது 

Miss U GPM

கோபாலப்பட்டிணத்தில் கடல் கடந்து தொழில் கல்வி மக்கள் வாழ்ந்து வருகின்றனர்..

பொதுவாக நோன்பு ஹஜ் பெருநாள் ஊரில் கொண்ட வேண்டும் என்று மக்களுக்கு அது ஒரு தனி ஆசை இருக்கும்..

சமூக வலைதளங்களில் வெளிநாடு வாழ் கோபாலப்பட்டிணம் மக்கள் ஊரில் இல்லையே Miss You GPM என்று கவலை அடைவார்கள்எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments