வாக்குச்சாவடிகளுக்கான பொருட்களை பிரித்து வைக்கும் பணி தீவிரம் மையங்களுக்கு நாளை அனுப்பப்படுகிறது




புதுக்கோட்டையில் வாக்குச்சாவடிகளுக்கான பொருட்களை பிரித்து வைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மையங்களுக்கு நாளை (வியாழக்கிழமை) அனுப்பப்படுகிறது.

சட்டமன்ற தொகுதிகள்

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதேபோல வாக்குப்பதிவும் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை (தனி) ஆகிய சட்டமன்ற தொகுதிகளும், கரூர் நாடாளுமன்ற தொகுதியில் விராலிமலை சட்டமன்ற தொகுதியும் அடங்கியுள்ளது.

இதேபோல சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் திருமயம், ஆலங்குடி சட்டமன்ற தொகுதிகளும், ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியும் இடம் பெற்றுள்ளது. இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் அந்தந்த நாடாளுமன்ற தொகுதிக்குட்டபட்ட சட்டமன்ற தொகுதிகளில் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

பொருட்கள்

வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தக்க கூடிய பேனா, பென்சில், வாக்காளர் பட்டியல், மை, ரப்பர் ஸ்டாம்ப், சீல் வைக்கப்படும் அரக்கு, லைட்டர் உள்பட 20-க்கும் மேற்பட்ட பொருட்கள் பிரித்து வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டையில் தாசில்தார் அலுவலகத்தில் வாக்குச்சாவடிகளுக்கான பொருட்கள் பிரித்து வைக்கப்பட்டு வருகின்றன.

வாக்குப்பதிவிற்கு முந்தைய நாளான வியாழக்கிழமை அன்று அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கப்படும் போது இந்த பொருட்களும் அனுப்பி வைக்கப்படும். இதேபோல மற்ற இடங்களிலும் அன்றைய தினம் வாக்குச்சாவடிகளுக்கான பொருட்கள் அனுப்பப்பட உள்ளது.



எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments