நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்: புதுக்கோட்டை மாவட்டத்தில் 24,400 இளம் வாக்காளர்கள் பெண்களை விட ஆண்கள் அதிகம்




நாடாளுமன்ற தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்களிக்க உள்ளதில் இளம் வாக்காளர்கள் மொத்தம் 24,400 பேர் உள்ளனர். இதில் பெண்களை விட ஆண்கள் அதிகம் உள்ளனர்.

வாக்குப்பதிவு

நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி கடந்த மார்ச் மாதம் 16-ந் தேதி அறிவிக்கப்பட்டது. அன்று முதல் நாடாளுமன்ற தேர்தல் களம் களை கட்ட தொடங்கியது. இதில் முதல் கட்டத்தில் தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது.

இந்த நாடாளுமன்ற தேர்தலில் 85 வயதிற்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தப்படி தபால் வாக்கினை பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பலரும் ஆர்வமுடன் வாக்கினை பதிவு செய்தனர். இதேபோல தபால் வாக்கினையும் ஆர்வமுடன் தேர்தல் அலுவலர்கள் பதிவிட்டனர். ஒருசிலர் தங்களுக்கு தபால் வாக்குப்பதிவிற்கான படிவம் கிடைக்கப் பெறவில்லை என குற்றம் சாட்டினர்.

இளம் வாக்காளர்கள்

நாடாளுமன்ற தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 லட்சத்து 64 ஆயிரத்து 734 ஆண் வாக்காளர்களும், 6 லட்சத்து 80 ஆயிரத்து 568 பெண் வாக்காளர்களும், 59 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 13 லட்சத்து 45 ஆயிரத்து 361 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதில் இளம் வாக்காளர்கள் 24,400 பேர் ஆவார்கள்.இளம் வாக்காளர்கள் என்பது 18 முதல் 19 வயதுடையவர்கள். முதன் முதலாக வாக்களிக்க உள்ளவர்கள் ஆவார்கள்.

இவர்களில் ஆண் வாக்காளர்கள் 13,395 பேரும், பெண் வாக்காளர்கள் 11,004 பேரும் உள்ளனர். இதனை ஒப்பிடும் போது பெண்களை விட ஆண் வாக்காளர்கள் 2,391 பேர் அதிகம் பேர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இளம் வாக்காளர்கள் தங்களது வாக்கினை யாருக்கு பதிவு செய்ய உள்ளனர் என்ற ஆவல் ஏற்பட்டுள்ளது.

இதேபோல அரசியல் கட்சியினரும், இளம் வாக்காளர்களின் வாக்குகளை கவர ஆர்வம் காட்டி வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments