மீமிசல் அருகே கோபாலப்பட்டிணத்தில் கொலை செய்யப்பட்ட நைனா முகமது வீட்டிற்கு சென்று உறவினர்களுக்கு ஆறுதல் கூறிய நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஹுமாயூன் கபீர் காவல்துறை குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தல்!





புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் வட்டம் கோபாலப்பட்டினத்தை சேர்ந்த நெய்னா முகமது என்பவர் மீமிசல் கடைவீதியில் நேஷனல் கூல்ட்ரிங்க்ஸ் என்னும் பெயரில் மளிகை கடை நடத்திக் கொண்டு வருகிறார்.

இவர் 22.04.2024 திங்கட்கிழமை அன்று  இரவு 11.30 மணி அளவில் கடை அடைத்து விட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருக்கும் பொழுது கோபாலப்பட்டினம் பிராதன சாலையான மீமிசல் சாலையில் சென்று கொண்டிருக்கும் பொழுது அங்கு வந்த கும்பல் அவரை வழிமறித்து ஆயுதங்களைக் கொண்டு கண்மூடித்தனமாக தாக்க தொடங்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

எனவே 25-04-2024 வியாழக்கிழமை இன்று கொலை செய்யப்பட்ட நெய்னா முகமது அவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து,கொலை  செய்த கும்பலை உடனடியாக கைது செய்யக்கோரி மீமிசல் காவல் நிலையத்திற்கு சென்று விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் முறையிடப்பட்டது.சம்மந்தப்பட்ட அதிகாரிகள் சனிக்கிழமைக்குள் குற்றவாளிகளை பிடித்து நடவடிக்கை எடுப்போம் என்று உறுதி அளித்தனர்.ஒருவேளை குற்றவாளிகளை கைது செய்யாமலோ நடவடிக்கை தாமதப்படுத்தினாலோ பொதுமக்களை திரட்டி நாம் தமிழர் கட்சி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துவோம் என்று நாம் தமிழர் கட்சி சார்பாக முறையிடப்பட்டது இதில் *மாநில ஒருங்கிணைப்பாளர் மு.இ.ஹூமாயுன் கபீர் அவர்கள்* மற்றும் நமது அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி உறவுகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

*_தொடர்புக்கு:_*

*வேங்கை பழனி*
அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதி செயலாளர்
*📞:9597046667*

*அப்பாசாமி*
அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதி தலைவர்
*📞:9787123770*

*முகமது இபுராகிம்*
அறந்தாங்கி சட்டமன்ற முன்னாள் தொகுதி செயலாளர்
*📞:9566654904*

*அலி அக்பர்*
ஆவுடையார்கோவில் கிழக்கு ஒன்றிய தலைவர்
*📞:9976077262*

*_செய்தி வெளியீடு:_*

நாம் தமிழர் கட்சி அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்



எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments