இனி ரயில் டிக்கெட்டை ஈஸியா புக் பண்ணலாம்... யுடிஎஸ் ஆப்பில் புதிய அம்சம் அறிமுகம்!



UTS App Train Ticket Booking: ரயிலில் பயணிக்க முன்பதிவு செய்யாத டிக்கெட்டை ஆன்லைனின் யுடிஎஸ் என்ற செயலி மூலம் எடுத்துகொள்ளலாம்.

ஆன்லைனில் எளிதாக ரயில் டிக்கெட் புக் செய்யும் செயலிதான் யுடிஎஸ் ஆப்.  யுடிஎஸ் ஆப் மூலம் பிளாட்பாம் டிக்கெட், மின்சார ரயில் டிக்கெட், மாதந்திர டிக்கெட் மற்றும் முன்பதிவு செய்யாத ரயில் டிக்கெட் ஆகியவற்றை உடனடியாக ஆன்லைன் மூலம் இ-டிக்கெட்டாக எடுத்துக் கொள்ளலாம்.

ரயில்வே தகவல் அமைப்பு மையத்தினால் உருவாக்கப்பட்ட இந்த ஆப், நாம் பயன்படுத்தும் மொபைலின் ஜிபிஎஸ் தகவல் அடிப்படையில் செயல்படுகிறது.

இதன்மூலம் ஒருவர் டிக்கெட் எடுக்கவேண்டும் என்றால், ரயில் நிலையத்தில் இருந்து 15 மீட்டர் தொலைவிலும் மற்றும் 2 கி.மீ தொலைவு உள்ளேயும் இருக்க வேண்டும்.

இதனால், டிக்கெட் எடுப்பதில் பலருக்கு சிரமம் ஏற்பட்டது. நீண்ட நாட்களாக யுடிஎஸ் ஆப் உபயோகப்படுத்தும் பயணாளர்கள் கோரிக்கை வைத்த நிலையில், இந்த முறையில் புதிய அம்சத்தை ரயில்வே தகவல் அமைப்பு மையம் உருவாக்கியுள்ளது.

இதன் மூலம், இனி எங்கிருந்து வேண்டுமானலும் டிக்கெட் எடுத்துகொள்ளலாம். ஆனால் ரயில் நிலையத்தின் உள்ளே இருந்து மட்டும் டிக்கெட் எடுக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments