ஏரியில் மண் அள்ளிச்சென்ற டிராக்டர்களை பறிமுதல் செய்த வருவாய் கோட்டாட்சியர்!



வெளியாத்தூர் ஏரியில் மண் அள்ளிச்சென்ற 2 டிராக்டர்களை வருவாய் கோட்டாட்சியர் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா, பொன்பேத்தி சரகம், வெளியாத்தூர் வருவாய் கிராமத்தில் வங்கநகரம் ஏரியில் நேற்று அதிகாலை அனுமதியின்றி 2 டிராக்டர்களில் மண் அள்ளி கொண்டு செல்லப்பட்டது. இது பற்றி தகவல் அறிந்த அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர், அந்த டிராக்டர்களை பறிமுதல் செய்து ஆவுடையார்கோவில் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments