தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின்கீழ் பயின்ற பிளஸ்-1மாணவ, மாணவிகளுக்கு பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் 4ம் தேதி தொடங்கி 25 ம் தேதி வரை நடைபெற்றது.
இந்த தேர்வை எழுத 7 ஆயிரத்து 534 பள்ளிகளை சேர்ந்த 8 லட்சத்து 20 ஆயிரத்து 207 மாணவ,மாணவிகள் பதிவு செய்தனர். இதில் 4 லட்சத்து 3 ஆயிரத்து 471 மாணவிகள், 3 லட்சத்து 89 ஆயிரத்து 736 மாணவர்கள் ஆவர். இதுதவிர, 5 ஆயிரம் தனித்தேர்வர்களும், 187 சிறை கைதிகளும் பிளஸ்-1 தேர்வை எழுத பதிவு செய்தனர். ஒட்டுமொத்தமாக 8 லட்சத்து 11 ஆயிரத்து 172 பேர் பிளஸ்-1 தேர்வு எழுதினர்.
இந்நிலையில், பிளஸ்-1 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அமைந்துள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககம் அலுவலகத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
இதில், 91.17 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 241 அரசுப்பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. மொத்தம் 8 லட்சத்து 11 ஆயிரத்து 172 பேர் தேர்வு எழுதிய நிலையில் இதில் 7 லட்சத்து 39 ஆயிரத்து 539 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
வழக்கம்போல் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 87.26 சதவீதம் தேர்ச்சி பெற்ற நிலையில் மாணவிகள் 94.69 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட 7.43 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்று மாணவிகள் அசத்தியுள்ளனர்.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டானிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 2023-24-ஆம் கல்வியாண்டுக்கான 11-ஆம் வகுப்பு தேர்வினை 54 பேர் எழுதினர். இதில் 35 பேர் மாணவி, 17 பேர் மாணவர் அடங்குவர். இதில் 92.30% (48/52) மாணவர்கள் தேர்ச்சி பெற்று தங்களது கல்வியை அடுத்த நிலைக்கு முன்னேறியுள்ளனர், அதேசமயம் 7.70% மாணவர்களின் வெற்றி வாய்ப்பு தள்ளிப்போய் உள்ளது. இதில் மாணவர்கள் 88.23% பேர் (15/17) தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 94.28% பேர் (33/35) தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வில் வெற்றி வாய்ப்பை இழந்தவர்கள் விரைவில் மறு தேர்வு எழுதி தங்களது கல்வியில் அடுத்த கட்டத்திற்கு முன்னேற்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் மூன்று இடங்களை பெற்றவர்கள் விபரம்:
1.M.ரகுமத் நிஷா - 504/600
2.A.அறபியா பேகம் - 496/600
3.R.பவதாரணி- 489/600
மாணவர்களை தேர்வுக்கு தயார்படுத்தி அதில் 92.30% சதவீதம் மாணவர்களை தேர்ச்சி பெற செய்த தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்களுக்கு பெற்றோர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் GPM மீடியா சார்பில் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
வரக்கூடிய கல்வியாண்டில் இப்பள்ளி 100% தேர்ச்சி விகிதம் பெற தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்களுக்கு GPM மீடியா வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.
![]() |
M.ரகுமத் நிஷா - 504/600 |
![]() |
A.அறபியா பேகம் - 496/600 |
![]() |
R.பவதாரணி- 489/600 |
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.