சேதுபாவாசத்திரம் கிழக்கு கடற்கரை சாலையோரத்தில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிழக்கு கடற்கரை சாலை
தஞ்சை மாவட்டத்தில், கிழக்கு கடற்கரை சாலையானது, தம்பிக்கோட்டையில் தொடங்கி, புதுக்கோட்டை எல்லையான கட்டுமாவடி வரை சுமார் 45 கி.மீட்டர் தூரம் கொண்டது. கன்னியாகுமரி - சென்னையை இணைக்கும் முக்கிய சாலையாக கிழக்கு கடற்கரை சாலை உள்ளது. இந்த வழியாக ராமேஸ்வரம், மனோரா, வேளாங்கண்ணி, நாகூர், புதுச்சேரி உள்ளிட்ட முக்கிய சுற்றுலா மற்றும் ஆன்மீக தலங்கள் உள்ளன. இதன் வழியாக தினசரி ஆயிரக்கணக்கானோர் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர். தஞ்சை மாவட்ட பகுதிகளான தம்பிக்கோட்டை வடகாடு, அதிராம்பட்டினம், புதுப்பட்டினம், மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம், சம்பைப்பட்டினம், செந்தலைப் பட்டினம், குப்பத்தேவன் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், சாலையின் இருபுறமும் சீமைக்கருவேல மரங்கள் புதர் போல் மண்டி கிடைக்கிறது.
கருவேல மரங்கள்
இந்த சீமைக்கருவேல மரங்கள் படர்ந்து சாலையில் விழுந்து கிடக்கிறது. இதனால் இந்த சாலையில் எதிரே கனரக வாகனங்கள் வரும்போது இரு சக்கர வாகனத்தில் செல்வோர் ஒதுங்க முடியாத நிலை உள்ளது. மேலும், எதிரே வரும் வாகனங்கள் தெரியாத வகையில் சாலையை மறைத்து கருவேலமரங்கள் காணப்படுகிறது.
இதன் காரணமாக அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. மேலும் சாலையில் செல்வோரின் முகம், கண்களை கருவேல மர முட்கள் பதம் பார்க்கிறது. எனவே கிழக்கு கடற்கரை சாலையோரத்தில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.