தொலைத்தொடர்பு அதிகாரிகள் போல் பேசி நிதி மோசடிக்கு முயற்சி போலி செல்போன் அழைப்புகளை நம்பி ஏமாற வேண்டாம் பொதுமக்களுக்கு மத்திய அரசு அறிவுரை




தொலைத்தொடர்பு அதிகாரிகள் போல் பேசி நிதி மோசடிக்கு முயற்சி செய்யும் போலி செல்போன் அழைப்புகளை நம்பி ஏமாற வேண்டாம் என்று பொதுமக்களுக்கு மத்திய அரசு அறிவுரை கூறியுள்ளது.

மிரட்டல்

மத்திய அரசின் தொைலத்தொடர்புத்துறை நேற்று பொதுமக்களுக்கு ஒரு அறிவுைர வெளியிட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தொலைத்தொடர்பு துறை அல்லது இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய (டிராய்) அதிகாரிகள் போல் சில இணைய குற்றவாளிகள் பொதுமக்களை தொடர்பு கொண்டு பேசி நிதி மோசடியில் ஈடுபடுவதாக புகார்கள் வந்துள்ளன. அவர்கள் அதிகாரிகள் போல் நடித்து, ‘‘உங்கள் செல்போன் இணைப்பை துண்டிப்போம்’’ என்றோ அல்லது ‘‘உங்கள் செல்போன் எண் சட்டவிரோத காரியங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது’’ என்றோ மிரட்டுவார்கள். அதன்மூலம் தனிப்பட்ட தகவல்களை திருடி, இணைய குற்றங்களிலோ அல்லது நிதி மோசடியிலோ ஈடுபடுவார்கள்.

ஏமாற ேவண்டாம்

இதுபோன்று தங்கள் சார்பில் பேசுவதற்கு தொலைத்தொடர்பு துறையோ அல்லது டிராய் அமைப்போ யாருக்கும் அதிகாரம் அளிக்கவில்லை. ஆகவே, போலி செல்போன் அழைப்புகளை ஏற்க வேண்டாம் என்றும், நம்பி ஏமாற வேண்டாம் என்றும் பொதுமக்களை கேட்டுக்கொள்கிறோம். அவர்களிடம் விழிப்புடன் இருக்க வேண்டும். மோசடி அழைப்புகள் குறித்து மத்திய அரசுக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும். இதன்மூலம், இணைய குற்றங்களுக்கு தொைலத்தொடர்பு வளங்களை தவறாக பயன்படுத்துவதை தடுக்க முடியும். இணைய குற்ற உதவிமைய எண் 1930-ல் தொடர்பு கொள்ளலாம். இணையதளத்திலும் புகார் அளிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அரசு அதிகாரிகள் போல், ‘92’ என்ற வெளிநாட்டு செல்போன் எண்ணில் தொடங்கும் வாட்ஸ்அப் அழைப்புகளில் பேசும் மோசடியாளர்கள் குறித்து தொலைத்தொடர்பு துறை ஏற்கனவே எச்சரிக்கை விடுத்து இருந்தது.

கடந்த வாரம், மத்திய உள்துறை அமைச்சகம், தொலைத்தொடர்பு துறை, மாநில போலீஸ் ஆகியவை இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில், 28 ஆயிரத்து 200 செல்போன்களும், 20 லட்சம் செல்போன் எண்களும் இணைய குற்றங்களுக்கு பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது.

அதனால் அந்த செல்போன்களையும், எண்களையும் முடக்க தொலைத்தொடர்பு துறை உத்தரவிட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments