தமிழகத்தில் ஆழமான கடல் பகுதிகளை கொண்டது குமரி மாவட்டம். இங்குள்ள கடலில் மற்ற இடங்களை விட ராட்சத அலைகள் ஆர்ப்பரித்தபடி இருக்கும். இதனால் சாதாரண நாட்களிலேயே கடலில் குளிப்பது ஆபத்தானதாக கருதப்படுகிறது. இந்த சூழ்நிலையில் குமரி மாவட்ட கடலில் சீற்றம் மற்றும் கொந்தளிப்பு வழக்கத்தை விட அதிகமாக இருக்கும்.
எனவே குமரி மாவட்ட சுற்றுலா தலங்களில் உள்ள கடலில் பொதுமக்கள் இறங்க வேண்டாம் என கலெக்டர் ஸ்ரீதர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
மருத்துவ மாணவர்கள்
ஆனால் இந்த எச்சரிக்கையை அறியாமல் குமரி மாவட்டத்துக்கு வந்த பயிற்சி டாக்டர்கள் 5 பேர் லெமூர் கடலில் மூழ்கி பலியான சோக சம்பவம் நடந்துள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-
திருச்சி எஸ்.ஆர்.எம். மருத்துவக்கல்லூரியில் 4 ஆண்டுகள் மருத்துவம் படித்து விட்டு தற்போது பயிற்சி டாக்டர்களாக பணியாற்றிய 17 பேர் நேற்று முன்தினம் குமரி மாவட்டம் வந்தனர்.
திருமண நிகழ்ச்சிக்கு வந்தனர்
அதாவது கரூரை சேர்ந்த செல்வக்குமார் மகள் நேசி (வயது 24), தேனி பெரியகுளம் தாய் காலனியை சேர்ந்த ராஜவேலு மகள் பிரீத்தி பிரியங்கா (23), மதுரையை சேர்ந்த சீனிவாசன் மகள் சரண்யா (24), நாகர்கோவில் அருகே உள்ள பறக்கை செட்டிதெருவை சேர்ந்த பசுபதி மகன் சர்வதர்சித் (24), திண்டுக்கல் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த முருகேசன் மகன் பிரவீன் சேம் (23), நெய்வேலியை சேர்ந்த பாபு மகள் காயத்திரி (25), தஞ்சாவூரை சேர்ந்த துரைசெல்வன் மகள் சாருகவி (23) மற்றும் ஆந்திராவை சேர்ந்த வெங்கடேஷ் (23) உள்பட 17 பேர் தங்களுடன் பணியாற்றிய நாகர்கோவில் செட்டித்தெருவை சேர்ந்த முத்துக்குமாரின் சகோதரர் திருமண நிகழ்ச்சிக்கு வந்தனர்.
இதை தொடர்ந்து திருமண வீட்டில் மணமக்களை வாழ்த்தி பரிசு வழங்கிய பயிற்சி டாக்டர்கள் மணமக்களுடன் சேர்ந்து குழு புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.
கடற்கரையை ரசித்தனர்
பின்னர் சுற்றுலா தலங்களை சுற்றி பார்க்க பயிற்சி டாக்டர்களில் சிலர் விரும்பினர். இதில் நேசி, பிரீத்தி பிரியங்கா, சரண்யா, சர்வதர்சித், பிரவீன் சேம், காயத்திரி, வெங்கடேஷ், சாருகவி உள்பட 12 பேர் நேற்று காலை கார் மூலம் கன்னியாகுமரிக்கு புறப்பட்டனர். அங்கு சூரிய உதயத்தை கண்டு ரசித்த அவர்கள் தொடர்ந்து ராஜாக்கமங்கலத்தை அடுத்த கணபதிபுரத்தில் உள்ள லெமூர் கடற்கரைக்கு காலை 9 மணிக்கு சென்றனர்.
குமரியின் மெரினா என்று அழைக்கப்படும் லெமூர் கடற்கரையின் அழகை கண்டு கழித்த பயிற்சி டாக்டர்கள் ஆர்வமிகுதியில் கடலில் கால் நனைக்க முடிவு செய்தனர். இதற்காக தாங்கள் அணிந்து வந்திருந்த காலணிகளை கடற்கரையில் கழற்றி போட்டு விட்டு கடலில் இறங்கினர். பொதுவாக லெமூர் கடல் மிகவும் ஆபத்து நிறைந்தது. ஆனால் அதுபற்றி தெரியாத பயிற்சி டாக்டர்கள் ஒருவரோடு ஒருவர் கைகோர்த்து நின்றபடி கடலில் கால் நனைத்தனர்.
அலை இழுத்துச் சென்றது
அந்த சமயத்தில் கடலில் எழும்பி வந்த ராட்சத அலை பயிற்சி டாக்டர்கள் மீது மோதியது. இதில் நிலைதடுமாறிய நேசி, பிரீத்தி பிரியங்கா, சர்வதர்சித், பிரவீன் சேம், காயத்திரி, வெங்கடேஷ், சாருகவி ஆகிய 7 பேரும் கீழே விழுந்தனர். விழுந்த வேகத்தில் அலை அனைவரையும் வாரிச்சுருட்டிக் கொண்டு உள்ளே சென்றது. இதனால் கடலில் தத்தளித்தபடி பயிற்சி டாக்டர்கள் காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என கூச்சலிட்டனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக பயிற்சி டாக்டர்களும், ஏற்கனவே லெமூர் கடற்கரைக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகளும் உடனே கடலுக்குள் இறங்கி காப்பாற்ற முயன்றனர்.
துரிதமாக செயல்பட்டதில் நேசியையும், பிரீத்தி பிரியங்காவையும் அவர்கள் உடனடியாக மீட்டனர். பிறகு 2 பேரும் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் சர்வதர்சித், பிரவீன் சேம், காயத்திரி, வெங்கடேஷ், சாருகவி ஆகிய 5 பேரால் கடலில் இருந்து வெளியே வர முடியவில்லை. ஒரு கட்டத்தில் கடலுக்குள் மூழ்கி விட்டனர். இதனை கரையில் இருந்து பார்த்த சக நண்பர்கள் பதற்றத்துடன், தங்களால் காப்பாற்ற முடியவில்லையே என கதறி துடித்தனர்.
5 பேர் பிணமாக மீட்பு
இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள், கடலோர பாதுகாப்பு குழும போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். மீனவர்களின் படகுகள் மூலம் தேடும் பணி நடத்தப்பட்டது. முதலில் 2 பேர் மீட்கப்பட்டனர். உடனே அவர்களை சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்தபோது 2 பேரும் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது.
அதே சமயத்தில் மற்ற 3 பேரை தேடும் பணி தீவிரமாக நடந்தது. 3 மணி நேர போராட்டத்துக்கு பிறகு அடுத்தடுத்து ஒவ்வொருவராக மீட்டனர். ஆனால் அந்த 3 பேரையும் பிணமாகத் தான் மீட்க முடிந்தது. இதனால் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது. இதனை தொடர்ந்து மீட்கப்பட்ட உடல்கள் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
3 பேருக்கு சிகிச்சை
முன்னதாக மீட்கப்பட்ட நேசி, பிரீத்தி பிரியங்கா ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் நண்பர்கள் கடலில் மூழ்கியதை பார்த்து சரண்யா என்பவர் அதிர்ச்சி அடைந்து மயக்கமானார். அவருக்கும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திருமண நிகழ்ச்சிக்கு வந்த இடத்தில் பயிற்சி டாக்டர்கள் கடலில் மூழ்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து குளச்சல் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜவேலு மகள் பிரீத்தி பிரியங்கா (23), மதுரையை சேர்ந்த சீனிவாசன் மகள் சரண்யா (24), நாகர்கோவில் அருகே உள்ள பறக்கை செட்டிதெருவை சேர்ந்த பசுபதி மகன் சர்வதர்சித் (24), திண்டுக்கல் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த முருகேசன் மகன் பிரவீன் சேம் (23), நெய்வேலியை சேர்ந்த பாபு மகள் காயத்திரி (25), தஞ்சாவூரை சேர்ந்த துரைசெல்வன் மகள் சாருகவி (23) மற்றும் ஆந்திராவை சேர்ந்த வெங்கடேஷ் (23) உள்பட 17 பேர் தங்களுடன் பணியாற்றிய நாகர்கோவில் செட்டித்தெருவை சேர்ந்த முத்துக்குமாரின் சகோதரர் திருமண நிகழ்ச்சிக்கு வந்தனர்.
இதை தொடர்ந்து திருமண வீட்டில் மணமக்களை வாழ்த்தி பரிசு வழங்கிய பயிற்சி டாக்டர்கள் மணமக்களுடன் சேர்ந்து குழு புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.
கடற்கரையை ரசித்தனர்
பின்னர் சுற்றுலா தலங்களை சுற்றி பார்க்க பயிற்சி டாக்டர்களில் சிலர் விரும்பினர். இதில் நேசி, பிரீத்தி பிரியங்கா, சரண்யா, சர்வதர்சித், பிரவீன் சேம், காயத்திரி, வெங்கடேஷ், சாருகவி உள்பட 12 பேர் நேற்று காலை கார் மூலம் கன்னியாகுமரிக்கு புறப்பட்டனர். அங்கு சூரிய உதயத்தை கண்டு ரசித்த அவர்கள் தொடர்ந்து ராஜாக்கமங்கலத்தை அடுத்த கணபதிபுரத்தில் உள்ள லெமூர் கடற்கரைக்கு காலை 9 மணிக்கு சென்றனர்.
குமரியின் மெரினா என்று அழைக்கப்படும் லெமூர் கடற்கரையின் அழகை கண்டு கழித்த பயிற்சி டாக்டர்கள் ஆர்வமிகுதியில் கடலில் கால் நனைக்க முடிவு செய்தனர். இதற்காக தாங்கள் அணிந்து வந்திருந்த காலணிகளை கடற்கரையில் கழற்றி போட்டு விட்டு கடலில் இறங்கினர். பொதுவாக லெமூர் கடல் மிகவும் ஆபத்து நிறைந்தது. ஆனால் அதுபற்றி தெரியாத பயிற்சி டாக்டர்கள் ஒருவரோடு ஒருவர் கைகோர்த்து நின்றபடி கடலில் கால் நனைத்தனர்.
அலை இழுத்து சென்றது
அந்த சமயத்தில் கடலில் எழும்பி வந்த ராட்சத அலை பயிற்சி டாக்டர்கள் மீது மோதியது. இதில் நிலைதடுமாறிய நேசி, பிரீத்தி பிரியங்கா, சர்வதர்சித், பிரவீன் சேம், காயத்திரி, வெங்கடேஷ், சாருகவி ஆகிய 7 பேரும் கீழே விழுந்தனர். விழுந்த வேகத்தில் அலை அனைவரையும் வாரிச்சுருட்டிக் கொண்டு உள்ளே சென்றது. இதனால் கடலில் தத்தளித்தபடி பயிற்சி டாக்டர்கள் காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என கூச்சலிட்டனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக பயிற்சி டாக்டர்களும், ஏற்கனவே லெமூர் கடற்கரைக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகளும் உடனே கடலுக்குள் இறங்கி காப்பாற்ற முயன்றனர்.
துரிதமாக செயல்பட்டதில் நேசியையும், பிரீத்தி பிரியங்காவையும் அவர்கள் உடனடியாக மீட்டனர். பிறகு 2 பேரும் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் சர்வதர்சித், பிரவீன் சேம், காயத்திரி, வெங்கடேஷ், சாருகவி ஆகிய 5 பேரால் கடலில் இருந்து வெளியே வர முடியவில்லை. ஒரு கட்டத்தில் கடலுக்குள் மூழ்கி விட்டனர். இதனை கரையில் இருந்து பார்த்த சக நண்பர்கள் பதற்றத்துடன், தங்களால் காப்பாற்ற முடியவில்லையே என கதறி துடித்தனர்.
5 பேர் பிணமாக மீட்பு
இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள், கடலோர பாதுகாப்பு குழும போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். மீனவர்களின் படகுகள் மூலம் தேடும் பணி நடத்தப்பட்டது. முதலில் 2 பேர் மீட்கப்பட்டனர். உடனே அவர்களை சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்தபோது 2 பேரும் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது.
அதே சமயத்தில் மற்ற 3 பேரை தேடும் பணி தீவிரமாக நடந்தது. 3 மணி நேர போராட்டத்துக்கு பிறகு அடுத்தடுத்து ஒவ்வொருவராக மீட்டனர். ஆனால் அந்த 3 பேரையும் பிணமாகத் தான் மீட்க முடிந்தது. இதனால் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது. இதனை தொடர்ந்து மீட்கப்பட்ட உடல்கள் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
3 பேருக்கு சிகிச்சை
முன்னதாக மீட்கப்பட்ட நேசி, பிரீத்தி பிரியங்கா ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் நண்பர்கள் கடலில் மூழ்கியதை பார்த்து சரண்யா என்பவர் அதிர்ச்சி அடைந்து மயக்கமானார். அவருக்கும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திருமண நிகழ்ச்சிக்கு வந்த இடத்தில் பயிற்சி டாக்டர்கள் கடலில் மூழ்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து குளச்சல் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
வெளிமாவட்டத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் குமரிக்கு வந்த இடத்தில் கடந்த 2 நாட்களில் கடல் அலையில் சிக்கி 7 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. இதுதவிர விழுந்தயம்பலம் பகுதியைச் சேர்ந்த தொழிலாளி பிரேமதாஸ் தனது மகள் ஆதிஷாவுடன் (7) தேங்காப்பட்டணம் கடல் அருகில் விளையாடியபோது ஆதிஷாவை ராட்சத அலை சுருட்டிக்கொண்டு சென்று விட்டது. பின்னர் நேற்று காலையில் ஆதிஷாவின் உடலும் பிணமாக மீட்கப்பட்டது. அந்தவகையில் கடலில் மூழ்கி பலியானவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. அதாவது லெமூர் கடலில் பயிற்சி டாக்டர்கள் 5 பேர், கோடிமுனையில் சென்னையை சேர்ந்த 2 பேர், தேங்காபட்டணத்தில் சிறுமி என 8 பேர் உயிரிழந்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.