அரசு பாலிடெக்னிக் நேரடி 2-ம் ஆண்டு மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு தொடக்கம்




தமிழக உயர்கல்வித்துறையின் தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் கீழ், 57 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளில், 2024-25-ம் கல்வியாண்டுக்கான நேரடி 2-ம் ஆண்டு மாணவர் சேர்க்கை ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கி உள்ளது. இதுகுறித்து, தொழில்நுட்ப கல்வி கமிஷனர் வீர ராகவராவ் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழகத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில், நேரடி 2-ம் ஆண்டு மாணவர் சேர்க்கை ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளது. இயற்பியல், கணிதம், வேதியியல், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், விலங்கியல், உயிரி தொழில்நுட்பம் உள்ளிட்ட பாடங்களுடன் பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பாலிடெக்னிக் கல்லூரி நேரடி 2-ம் ஆண்டு சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம். அதேபோல், எஸ்.எஸ்.எல்.சியுடன் 2 ஆண்டுகள் ஐ.டிஐ தேர்ச்சி பெற்ற மாணவர்களும் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் நேரடி 2-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ள மாணவர்கள், www.tnpoly.in என்ற இணையதளத்தில் வருகிற 20-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப பதிவு கட்டணமாக பொதுப்பிரிவினருக்கு ரூ.150 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு பதிவு கட்டணம் கிடையாது. ஆன்லைன் வாயிலாக பாலிடெக்னிக் படிப்புக்கு விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள், மாவட்ட சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments