கஞ்சா வியாபாரிகளுடன் தொடா்பு: தலைமைக் காவலா்கள் இருவா் பணியிடை நீக்கம்




புதுக்கோட்டை மாவட்டத்தில் கஞ்சா வியாபாரிகளுடன் தொடா்பில் இருந்த இரு தலைமைக் காவலா்கள் திங்கள்கிழமை இரவு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

கஞ்சா வியாபாரிகளுடன் தொடா்பில் இருந்ததாக புதுக்கோட்டை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு தலைமைக் காவலா் கந்தவேல், அறந்தாங்கி காவல் நிலைய தலைமைக் காவலா் முத்துக்குமாா் ஆகிய இருவரையும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வந்திதா பாண்டே திங்கள்கிழமை இரவு பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.

உளவுத் துறையினா் கொடுத்த தகவலின்பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments