நிலத்தின் சர்வே எண் வேண்டும். சர்வே எண்களை அரசே இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இதன் மூலம் ஒரு நிலம் அல்லது வீடு யாருடையது என்பதை எளியதாக அறிய முடியும். கூகுள் மேப் மூலம் இதை அனைவரும் தெரிந்துகொள்ளலாம். எந்த நிலத்திற்கும் உரிமையாளர் யார் என்பதை கூகுள் மேப் மூலம் எளிதாக கண்டுபிடிக்கும் வசதி இருப்பது உங்களுக்குத் தெரியுமா? நிலத்தின் உரிமையாளர் யார் என்று அறிய வேண்டும் என்றால், நிலத்தின் சர்வே எண் வேண்டும். சர்வே எண்களை அரசே இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் ஒரு நிலம் அல்லது வீடு யாருடையது என்பதை எளியதாக அறிய முடியும். கூகுள் மேப் மூலம் இதை அனைவரும் தெரிந்துகொள்ளலாம். எந்த இடத்தின் விவரத்தை அறிய வேண்டுமோ அந்த இடத்திற்குச் சென்று மொபைலில் கூகுள் மேப் செயலியைத் திறந்து சாட்டிலைட் வியூ ஆப்சனை தேர்வு செய்யவும்.
நீங்கள் இருக்கும் இடத்தை ஜூம் செய்து அதை ஒரு ஸ்கிரீன்ஷாட் எடுத்துக்கொள்ளுங்கள். பிறகு https://tngis.tn.gov.in/apps/village_dashboard/ என்ற இணையதளத்திற்குச் செல்லவும். இது தமிழ்நாடு அரசு நடத்தும் அதிகாரபூர்வ இணையதளம். இந்தத் தளத்திற்குச் சென்று நிலம் இருக்கும் மாவட்டம், தாலுகா, கிராமம் ஆகியவற்றை அடுத்தடுத்து தேர்வு செய்யவும்.
இப்போது இணையதளத்தில் உள்ள கூகுள் மேப்பில் நீங்கள் தேர்வு செய்த இடம் தோன்றும். குறிப்பிட்ட கிராமத்தில் உள்ள அனைத்து சர்வே நம்பர்களும் மஞ்சள் நிறத்தில் குறிக்கப்பட்டிருக்கும். இதை கூகுள் மேப்பில் எடுத்த ஸ்கிரீன்ஷாட்டுடன் ஒப்பிட்டுப் பார்த்து நீங்கள் இருக்கும் இடத்தின் சர்வே நம்பரைத் தெரிந்துகொள்ளலாம்.
பிறகு https://eservices.tn.gov.in/eservicesnew/home.html என்ற தமிழக அரசின் மற்றொரு இணையதளத்திறகுச் செல்லுங்கள். பட்டா சிட்டா விவரங்களை பார்வையிடும் பகுதிக்குச் செல்லுங்கள். மாவட்டம், வட்டம், கிராமம் எனத் தேர்வு செய்து, பட்டா எண், புல எண் எனக் குறிப்பிட்டிருக்கும் இடத்தில் புல எண்ணை டைப் செய்யுங்கள்.
பிறகு உட்பிரிவு எண்ணையும் டைப் செய்துவிட்டு, கீழே கொடுக்கப்பட்டுள்ள கேப்சாவை (Captcha) கவனமா பார்த்து, சரியாக அதற்குரிய இடத்தில் டைப் செய்யுங்கள். பிறகு சமர்பி என்ற பட்டனை கிளிக் செய்தால், நீங்கள் பார்க்க விரும்பிய நிலத்தின் உரிமையாளர் யார் என்று தெரிந்துவிடும்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.