புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வெப்ப தாக்க நோய் சிகிச்சைக்காக தனி வார்டு தொடக்கம்




புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வெப்ப தாக்க நோய் சிகிச்சைக்காக தனி வார்டு தொடங்கப்பட்டது.

தனி வார்டு தொடக்கம்

தமிழகத்தில் வெப்ப அலையின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்த நிலையில் கோடை காலத்தில் வெப்பத்தினால் மற்றும் வெப்ப அலையின் தாக்கத்தால் ஏற்படும் நோய்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகளில் தனி வார்டு தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள் நோயாளிகள் சிகிச்சை பிரிவில் வெப்ப தாக்க நோய் சிகிச்சைக்காக தனி வார்டு நேற்று முன்தினம் தொடங்கப்பட்டது.

இதனை டீன் மணி தொடங்கி வைத்தார். மேலும் சிகிச்சைக்கான உபகரணங்களை அவர் பார்வையிட்டார். இந்த வார்டில் 10-க்கும் மேற்பட்ட படுக்கைகள் உள்ளன. சிறப்பு வார்டு குறித்து டீன் மணி கூறியதாவது:- இந்த சிகிச்சை வார்டு 24 மணி நேரமும் இயங்க கூடியது. சிகிச்சைக்கான அனைத்து வசதிகளும் உள்ளது.

தண்ணீர் குடித்தல்

வெப்ப தாக்கத்தினை சமாளிக்க உணவு பழக்கங்களை கையாள வேண்டும். வெயிலில் வேலை செய்பவர்கள் அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும். மோரும் அதிகம் குடிக்கலாம். தர்பூசணி பழங்கள் சாப்பிடலாம். இளநீர், எலுமிச்சை ஜூஸ் உள்ளிட்ட ஜூஸ்வகைகளை குடிக்கலாம். பொதுமக்கள் இந்நேரங்களில் பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். வெப்ப தாக்குதல் நோயால் புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. தலைசுற்றல், மயக்கம் உள்ளிட்ட சிறிய அளவிலானவில் வருகிறவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது மருத்துவமனை அதிகாரிகள் ராஜ்மோகன், தையல்நாயகி, இந்திராணி உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments