தானாக தீப்பற்றி எரியும் விபத்தை தடுக்க மோட்டார் வாகனங்களில் மாற்றங்கள் செய்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
ஆய்வு
சாலையில் ஓடி கொண்டிருக்கும்போது கார்கள் திடீரென்று தீப்பற்றி எரியும் சம்பவங்கள் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன. சமீபத்தில் சென்னை மெரினா கடற்கரை சாலையில் தனியார் ஆஸ்பத்திரிக்கு சொந்தமான கார் தீப்பற்றி எரிந்தது. திடீரென்று வாகனங்கள் தீ பிடித்து எரிவது வாகன ஓட்டிகளையும், சாலையில் செல்லும் பாதசாரிகளையும் பீதிக்கு உள்ளாக்குகிறது.இந்த நிலையில் மோட்டார் வாகனங்கள் தானாக தீப்பற்றி எரியும் விபத்துக்கள் குறித்து போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையரகம் சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் இந்த விபத்துக்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளது.
சட்டப்படி குற்றம்
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் சாலை பாதுகாப்பு, போக்குவரத்து கமிஷனர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சமீபகாலமாக மோட்டார் வாகனங்கள் தானாக தீப்பற்றி எரியும்
தீ விபத்துக்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த விபத்துக்கள் பற்றி ஆய்வு செய்கையில் மோட்டார் வாகனங்களில் மாறுதல் செய்யப்படுகையில் அங்கீகரிக்கப்படாத சி.என்.ஜி./எல்.பி.ஜி. (கியாஸ்) மாற்றங்கள், அதற்கான அங்கீகரிக்கப்படாத அல்லது தகுதியில்லாத நிறுவனங்களால் மாற்றம் செய்யப்பட்டு, வாகனங்கள் தீ விபத்துக்குள்ளாகிறது. வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் (ஆர்.டி.ஓ.) உரிய அனுமதியின்றி வாகனங்களில் மாற்றம் செய்யப்படுவது மோட்டார் வாகனச் சட்டம் மற்றும் விதிகளின்படி குற்றமாகும். எனவே, வாகன உரிமையாளர்கள் இவ்வகையான செயல்களில் ஈடுபட வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.