ஆவுடையார்கோவில் அருகே சிறுகாசாவயல் கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு வெள்ளாற்றில் குழித்தோண்டி தண்ணீர் எடுக்கும் நிலை




ஆவுடையார் கோவில் அருகே சிறுகாசாவயல் கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வெள்ளாற்றில் குழித்தோண்டி தண்ணீர் எடுக்கும்  நிலை ஏற்பட்டுள்ளது.

குடிநீர் தட்டுப்பாடு

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவில் அருகே சிறுகாசாவயல் கிராமத்தில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள பொதுமக்களுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக மாதத்தில் ஒரு நாள் மட்டுமே 2 குடிநீர் குழாய்கள் மூலம் சுமார் அரை மணி நேரம் மட்டுமே தண்ணீர் விடப்படுகிறது. இதனை அப்பகுதி பொதுமக்கள் பிடித்து பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் சிலருக்கு குடிதண்ணீர் கிடைக்காமல் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ஒரு குடம் தண்ணீரை ரூ.15 கொடுத்து வாங்கி வருகின்றனர்.

கோரிக்கை

மேலும் சிலர் இந்த கிராமத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வெள்ளாற்றில் குழித்தோண்டி அதில் ஊற்று மூலம் வரும் தண்ணீரை எடுத்து வந்து உபயோகப்படுத்தி வருகின்றனர். இதனால் வீண் அைலச்சல் மற்றும் கால நேரமும் வீணாகி வருகிறது.

மேலும், கால்நடைகளுக்கும் இந்த ஊற்று தண்ணீரை தான் உபயோகப்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் மற்றும் சம்பந்தப்பட்ட குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments