உச்சிப்புளி அருகே அரியமான் கடலில் ஆபத்தை அறியாமல் குளிக்கும் சுற்றுலா பயணிகள்




உச்சிப்புளி அருகே அரியமான் கடலில் ஆபத்தை அறியாமல் சுற்றுலா பயணிகள் கடலில் குளிக்கின்றனர்.

அரியமான் கடற்கரை

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் தேர்வுகள் முடிந்து கோடைகால விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதி காணப்படுகிறது. குறிப்பாக அருவி, மலை தொடர், கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவு குவிந்து வருகின்றனர்.

இதனிடையே உச்சிப்புளி அருகே உள்ள அரியமான் கடற்கரைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுகிறது. இவ்வாறு அரியமான் கடற்கரை வரும் சுற்றுலா பயணிகள் கடற்கரை அருகே மிக நீண்ட கிலோமீட்டர் தூரத்திற்கு வளர்ந்து நிற்கும் சவுக்கு மரங்களின் அழகை பார்த்து ரசித்து வருகின்றனர். மேலும் கடலில் குழந்தைகளுடன் இறங்கி குளித்து மகிழ்ந்து வருகின்றனர். இவ்வாறு கடலில் இறங்கி குளிக்கும் சுற்றுலா பயணிகள் சிலர் ஆபத்தை அறியாமல் நீண்ட தூரம் வரையும் சென்று குளிக்கின்றனர். குறிப்பாக இளைஞர்கள் கடலின் மிக ஆழமான பகுதி வரை சென்று குளிக்கின்றனர்.

ஆபத்தை அறியாமல்

கடலில் சுற்றுலா பயணிகள் பலர் ஆழமான பகுதிக்கு சென்று குளிப்பதை தடுப்பதற்கு அங்கு கடலோர போலீசார் ஒருவர்கூட இல்லை. இதனால் ஆபத்தை அறியாமல் குளிக்கும் சுற்றுலா பயணிகள் சிலர் கடலில் மூழ்கி உயிரிழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. ஏற்கனவே கடந்த வாரத்தில் கன்னியாகுமரி கடலில் இதுபோன்று கடலில் இறங்கி குளித்த சுற்றுலா பயணிகள் 4 பேர் கடலில் மூழ்கி பலியாகினர்.

அதனால் அரியமான் கடலில் ஆழமான கடல் பகுதிக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க செல்வதை தடுக்கும் வகையில் அங்கு எச்சரிக்கை அறிவிப்பு பலகைகள் வைப்பதற்கும், கோடைகாலம் விடுமுறை முடியும் வரையில் அங்கு கடலோர போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தவும், பாதுகாப்பை அதிகரிக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரியமான் கடலிலும் குளித்த பல சுற்றுலா பயணிகள் மூழ்கி உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments