புதுக்கோட்டை மாவட்டத்தில் மீன்பிடி படகுகளை அதிகாரிகள் வருகிற 5, 6-ந் தேதிகளில் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.
நாட்டுப்படகு
நடப்பாண்டிற்கான (2024-25) தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் படி, மீன்பிடி தடைகாலத்தில், அனைத்து வகை மீன்பிடி படகுகளை (பதிவு செய்யப்பட்டவை மற்றும் பதிவு செய்யப்படாதவை) ஆய்வு செய்யப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நாட்டுப்படகுகளை வருகிற 5, 6-ந் தேதிகளில் சிறப்பு குழுக்கள் மூலம் நேரடி ஆய்வு செய்யப்பட உள்ளது.
மீன்பிடி நாட்டுப்படகுகளை ஆய்வு செய்வது தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகளை அனைத்து மீனவ கிராம கூட்டுறவு சங்கத்திற்கும் மற்றும் மீனவ கிராமங்களும் மேற்கொள்ளவும். மேலும் படகு ஆய்வின் போது நாட்டுப்படகு உரிமையாளர்களின் ஆதார் அட்டை, படகு பதிவு சான்றிதழ், டீசல் மானிய அட்டை, குடும்ப அட்டை மற்றும் மீன்வளத்துறை மூலம் வழங்கப்பட்ட தொலை தொடர்பு சாதனங்கள் ஆகியவை ஆய்வுக்குழு வசம் ஆய்வுக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும். மேலும் தங்களது நாட்டுப்படகினை தவறாது ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.
மானிய டீசல் நிறுத்தம்
மேலும், மேற்படி ஆய்விற்கு உரிய ஆவணங்களுடன் உட்படுத்தப்படாத நாட்டுப்படகிற்கு மானிய டீசல் உடனடியாக நிறுத்தப்படும். பதிவு ரத்து செய்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
வருகிற 5-ந் தேதி கட்டுமாவடி, அழகன்வயல், முடுக்குவயல், பிரதாபிராமன்பட்டினம், கிருஷ்ணாஜிப்பட்டினம், மேலஸ்தனம், சீத்தாராமன்பட்டினம், மும்பாலை, பட்டாங்காடு, வடக்கு மணமேல்குடி, வடக்கம்மாப்பட்டினம், கீழக்குடியிருப்பு, பொன்னகரம், அந்தோணியார்புரம், துளசியாப்பட்டினம், அம்மாப்பட்டினம், ஆதிப்பட்டினம், புதுக்குடி மற்றும் கோட்டைப்பட்டினம் ஆகிய மீனவ கிராமங்களில் அதிகாரிகளால் ஆய்வு செய்யப்படவுள்ளது.
முத்துக்குடா
அதனைத் தொடர்ந்து, வருகிற 6-ந் தேதி செல்லனேந்தல், ஜெகதாப்பட்டினம், அய்யம்பட்டினம், ஏம்பவயல், முத்தனேந்தல், பாலக்குடி, குமரப்பன்வயல், கோபாலப்பட்டினம், மீமிசல், ஆர்.புதுப்பட்டினம், அரசநகரிப்பட்டினம், முத்துக்குடா மற்றும் ஏனாதி ஆகிய மீனவ கிராமங்களில் ஆய்வு செய்யப்படவுள்ளது. மேலும், அன்றைய தேதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். மேற்கண்ட தகவலை கலெக்டர் மெர்சி ரம்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.