மழை பாதிப்புகளை கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி எண்ணில் தகவல் தெரிவிக்கலாம் என கலெக்டர் மெர்சிரம்யா தெரிவித்தார்.
கலந்தாய்வு கூட்டம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் கனமழையின் காரணமாக மேற்கொள்ளப்படும் முன்னேற்பாடு பணிகள் குறித்தும் மற்றும் அனைத்துத்துறை பணிகள் குறித்தும், கலந்தாய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் மெர்சி ரம்யா தலைமை தாங்கி தெரிவித்ததாவது:-
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில், இந்திய வானிலை ஆய்வு மையம் மூலம் பெற்றப்பட்ட அறிக்கையின்படி, தமிழகத்தில் வருகிற 19-ந் தேதி வரை கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தை பொறுத்த வரையில் இன்றும் (வெள்ளிக்கிழமை), நாளையும் (சனிக்கிழமை), நாளை மறுநாளும் (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிவாரண மையங்கள்
அதன்படி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குளங்கள், ஏரிகள் மற்றும் கண்மாய்கள் உள்ளிட்ட நீர் நிலைகளில் நிரம்பியுள்ள நீரின் இருப்புக் குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் புயல், வெள்ளம் சூறாவளி ஆகியவற்றால் ஏற்படும் மின்தடையினை சரி செய்வதற்கு முன்னெச்சரிக்கையாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் மின்கம்பங்களும், மின்கம்பிகள் மற்றும் மின்மாற்றிகள் தயார் நிலையில் உள்ளன. மேலும், புயல், வெள்ளம் ஏற்படும் காலங்களில் மக்களை பாதுகாப்பாக தங்க வைக்க ஏதுவாக 10 பல்நோக்கு பேரிடர் மையக் கட்டிடங்கள் மற்றும் நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளன.
கட்டுப்பாட்டு அறை எண்
மழைக்காலங்களில் ஏற்படும் இடர்பாடுகள் குறித்த தகவல்களை 24 மணி நேரமும் செயல்படக்கூடிய மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு அறை எண்- 1077, 04322-222207 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கூட்டத்தில், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) அப்தாப் ரசூல், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முருகேசன், வருவாய் கோட்டாட்சியர்கள் ஐஸ்வர்யா (புதுக்கோட்டை), சிவக்குமார் (அறந்தாங்கி), தெய்வநாயகி (இலுப்பூர்) மற்றும் அரசு துறை உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.