பள்ளி மாணவர்களுக்கான விலையில்லா பொருட்கள் புதுக்கோட்டைக்கு வரத்தொடங்கின




பள்ளி மாணவர்களுக்கான விலையில்லா பொருட்கள் புதுக்கோட்டைக்கு வரத்தொடங்கின.

விலையில்லா பொருட்கள்

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து அடுத்த மாதம் (ஜூன்) பள்ளிகள் திறக்கப்படுகிறது. இதையொட்டி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவ- மாணவிகளுக்கான விலையில்லா பாடப்புத்தகங்கள் தமிழ்நாடு பாடநூல் கழகம் மூலம் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்திலும் விலையில்லா பாடப்புத்தகங்கள் வந்தன. குடோனில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள அவை அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.இதற்கிடையில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் விலையில்லா பொருட்களும் வரத்தொடங்கின. இதில் ஷூ மற்றும் சாக்ஸ் புதுக்கோட்டைக்கு நேற்று சரக்கு வாகனத்தில் வந்தன. புதுக்கோட்டையில் குடோனில் அவை இறக்கி வைக்கப்பட்டுள்ளன.

புத்தக பைகள்

இந்த ஷூக்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 10-ம் வகுப்புகளை சேர்ந்த 20 ஆயிரம் மாணவர்களுக்கும், 17 ஆயிரம் மாணவிகளுக்கும் வழங்கப்பட உள்ளன. இவை அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பப்பட உள்ளன.

இதேபோல் விலையில்லா புத்தக பைகள், எழுதுபொருட்கள், உபகரணங்கள், தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு காலணிகள், சீருடைகள் உள்ளிட்ட விலையில்லா பொருட்கள் அடுத்தடுத்து வர உள்ளன.

அதன்பின் அவை அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பப்படும்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments