மாவட்டத்தில் 45 இடங்களில் புதிதாக தானியங்கி மழைமானி கருவி




புதுக்கோட்டை மாவட்டத்தில் மழை அளவவை கணக்கிடும் வகையில் ஆங்காங்கே மழைமானி கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதேபோல காற்றின் வேகம், தட்பவெப்பம் அறிவிப்பதற்கான கருவிகளும் சம்பந்தப்பட்ட துறைகளின் மூலம் வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தானியங்கி மழைமானி கருவி புதிதாக பொருத்த அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர். இதில் மாவட்டத்தில் 45-க்கும் மேற்பட்ட இடங்களில் தானியங்கி மழைமானி பொருத்தப்பட உள்ளது. இதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதேபோல வெயிலின் அளவை கணக்கிடும் வகையில் புதிய கருவி கந்தர்வகோட்டை, ஆவுடையார்கோவில், மணமேல்குடி ஆகிய இடங்களில் வைக்கப்பட உள்ளது. இவை செயற்கைகோள் உதவியுடன் இயங்கும் வகையில் அமைக்கப்பட உள்ளது. இந்த புதிய தானியங்கி மழைமானி கருவி, வெப்பமானி கருவி விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments