ஒரே வீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின்சார இணைப்புகள்: வீடு வீடாக சென்று ஆய்வு செய்யும் பணி தீவிரம் அதிகாரிகள் தகவல்




ஒரே வீட்டில் ஒருவர் பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட கூடுதல் மின்சார இணைப்புகளை ஒழுங்குப்படுத்த வீடு வீடாக ஆய்வு செய்யும் பணி தொடங்கி நடந்து வருகிறது என்று எரிசக்திதுறை அதிகாரிகள் கூறினர்.

வீடு வீடாக சென்று ஆய்வு

தமிழ்நாட்டில் 2 கோடியே 30 லட்சம் வீட்டு மின்சார இணைப்புகளுடன் சேர்த்து ஆக மொத்தம் 3 கோடி மின்சார இணைப்புகள் கொடுக்கப்பட்டு உள்ளன.

இதில் 11 லட்சம் குடிசை மின்சார இணைப்புகள், தொழிற்சாலை, வர்த்தக நிறுவனங்களுக்கு 33 லட்சம் மின்சார இணைப்புகளும் அடங்கும். இதில் 60 லட்சம் பேர் 100 யூனிட்டுக்குள் வருகிறார்கள். இவர்களுக்கு 2 மாதத்திற்கு ஒரு முறை மின்சார கணக்கு எடுக்கும்போது மின்சார பயன்பாடு 100 யூனிட்டை கடந்து விடுகிறது.

இதனால் 100 யூனிட் இலவச மின்சாரம் கிடைப்பதற்காக ஒரே வீட்டில் 2-க்கும் மேற்பட்ட மின்சார இணைப்புகளை சிலர் பயன்படுத்துகின்றனர். இதனை யார், யார் தவறாக பயன்படுத்துகின்றனர் என்று கண்டுபிடிப்பதற்காக வீடு வீடாக சென்று ஆய்வு செய்யும் பணி நடந்து வருகிறது.

வீடுகளுக்கு நோட்டீசு

இதுகுறித்து மின்சார வாரிய அதிகாரிகள் கூறும்போது; ‘ஆய்வு செய்து, ஒன்றுக்கு மேற்பட்ட மின்சார இணைப்புகள் வைத்துள்ள வீடுகளை கண்டறிந்து உடனடியாக நோட்டீசு வழங்கப்பட உள்ளது. அதற்கான விளக்கத்தை பெற்று மின்சார இணைப்புகளை முறைப்படுத்த வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மானியத்தை தவறாகப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதற்காக ஒவ்வொரு குடும்பமும் ஒரு அடுக்குமாடி சேவை இணைப்பை மட்டுமே பெறவேண்டும் என்று உத்தரவு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி கூடுதல் இணைப்புகளை 2 வாரங்களுக்குள் ஒரு இணைப்பாக இணைக்க மின்சார வாரியத்திற்கு அறிவுறுத்தல் தரப்பட்டுள்ளது.

அடுக்குமாடி குடியிருப்புகள்

குறிப்பாக, வாடகை மற்றும் குத்தகைக்கு விடப்பட்டுள்ள வீடுகளுக்கு அதற்கான ஒப்பந்த ஆவணங்களை வாங்க வேண்டும். கூட்டுக் குடும்பமாக வசிப்பவர்கள் தனித்தனி குடும்ப அட்டை வைத்திருந்தால் அந்தக் குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின்சார இணைப்புகள் இருந்தால், அவை சொந்த பயன்பாட்டுக்கு இல்லை என்பதை அறிந்து, கொள்ள வாடகைக்கு விட்டு இருந்தால் அதற்கான ஆவணங்களும் பெறப்பட உள்ளது.

அதோடு, வீட்டு இணைப்புகளை ஒழுங்குப்படுத்துவதற்கு ஒவ்வொரு வீடு, குடியிருப்பு, அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்யப்பட உள்ளது' என்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments