ஒரத்தநாடு அருகே பரிதாபம்: பாத்திரத்தில் தவறி விழுந்த பெண் குழந்தை தண்ணீரில் மூழ்கி சாவு




ஒரத்தநாடு அருகே பாத்திரத்தில் தவறி விழுந்த பெண் குழந்தை தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தாள்.

4 வயது குழந்தை

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள பேய்கரும்பன்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரன். இவருடைய மனைவி நிவேதிதா. இவர்களுடைய மகள் தீக்சிகா (வயது4) நேற்று முன்தினம் வீட்டில் விளையாடி கொண்டிருந்தாள். அப்போது சாப்பிடுவதற்கு கை கழுவ தீக்சிகா கழிவறைக்கு சென்றார்.

அங்கு தண்ணீர் நிரப்பப்பட்டிருந்த பெரிய பாத்திர த்தில் கை கழுவுவதற்காக கீழே குனிந்தபோது எதிர்பாராதவிதமாக அவள் நிலை தடுமாறி குவளையில் தலை குப்புற விழுந்தாள்.

பரிதாப சாவு

கை கழுவ சென்ற குழந்தை வெகு நேரமாகியும் வராததால் மகேந்திரன் கழிவறைக்கு சென்று பார்த்த போது தீக்சிகா பாத்திரத்தில் விழுந்து தண்ணீரில் மூழ்கி கிடந்தது தெரியவந்தது. இதனால் பதறிப்போன அவர் உடனடியாக குழந்தையை தூக்கி கொண்டு ஒரத்தநாடு அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதைக் கேட்டு பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்த பாப்பாநாடு போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு பின்னர் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

பெண் குழந்தை பாத்திர த்துக்குள் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி பலியானது அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments