அறந்தாங்கி அருகே பெண்மணிக்கு 108 ஆம்புலன்ஸிலேயே அவசரகால மருத்துவ நுட்புனர்



 

புதுக்கோட்டை மாவட்டம்,  அறந்தாங்கி தாலுக்கா, அரசர்குளம்  கிராமத்தில்  இருந்து பிரசவ வலி என நேற்று காலை 10:50 மணியளவில் 108 -க்கு அழைப்பு வந்தது. பிறகு அறந்தாங்கி  GH  108 ஆம்புலன்ஸ் விரைந்து சென்று  சத்தியா  வயது 30 என்ற அந்தப் பெண்மணியை ஏற்றி கொண்டு வரும் வழியில் அந்த பெண்மணிக்கு பிரசவ வலி அதிகமானதால்  ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தோழர் பிரகாஷ் ஆம்புலன்சினை ரத்தினகோட்டை   அருகில்  ஓரமாக நிறுத்தினார்.அந்த பெண்மணிக்கு ஆம்புலன்ஸிலேயே அவசரகால மருத்துவ நுட்புனர் தோழர்.

கருணாகரன் அவர்கள் பிரசவம் பார்த்து மருத்துவ சிகிச்சை அளித்தார். அந்தப் பெண்மணிக்கு காலை 11:45 மணியளவில்  அழகான பெண் குழந்தை பிறந்தது. பிறகு மருத்துவ சிகிச்சை அளித்து பாதுகாப்பாக அறந்தாங்கி  அரசு  மருத்துவமனைக்கு  அழைத்து சென்று அங்கு தாய்,சேய் இருவரும் பாதுகாப்பாக அனுமதிக்கப்பட்டனர்.

இந்தப் பணியை சிறப்பாக செய்த ஓட்டுநர் தோழர் பிரகாஷ் மற்றும் மருத்துவ நுட்புனர் தோழர் கருணாகரன்  ஆகிய 108 ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு  அறந்தாங்கி  பகுதி பொதுமக்கள் வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments