குழந்தை திருமணம்
பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியான நிலையில் உயர்கல்வியில் சேர மாணவ-மாணவிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதேநேரத்தில் பிளஸ்-2 முடித்த மாணவிகளில் சிலரை அவர்களது பெற்றோர் திருமணத்திற்கு ஏற்பாடு செய்து வைப்பதாகவும், இது தொடர்பாக கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்படுவதாகவும் ஒரு நிகழ்ச்சியில் உயர் அதிகாரி ஒருவர் வேதனையுடன் தெரிவித்தார்.
அதனால் 18 வயது நிரம்பாத சிறுமிகளை திருமணம் செய்து கொடுப்பதை பெற்றோர் தவிர்க்க வேண்டும் எனவும், சட்டப்படி குற்றம் எனவும், மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொதுமக்களிடம் குழந்தைகள் நல பாதுகாப்பு குழுமத்தினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
5 திருமணங்கள் நிறுத்தம்
இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், "கடந்த 2 மாதங்களில் 5 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. மாணவிகள் சிலரை மேற்கொண்டு படிக்க வைக்காமல் உறவு முறையில் திருமணத்திற்கு ஏற்பாடு செய்து விடுகின்றனர். தற்போது முகூர்த்த நாள் அதிகம் வருவதால் குழந்தை திருமணங்கள் நடத்தப்படுவதை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 1098 என்ற தொலைபேசி எண்ணிற்கு வரும் தகவல்களின் அடிப்படையிலும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். குழந்தை திருமணங்கள் நடைபெறுவது குறித்து தெரிந்தால் முன்கூட்டியே தகவல் தெரிவிக்கலாம்'' என்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.