அடடா “Delete for Me” கொடுத்துட்டீங்களா? கவலையே வேண்டாம்.. பெரிய சிக்கலுக்கு விடை கொடுத்த வாட்ஸ் அப்!




வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட்டால் யூசர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வாட்ஸ் அப்பில் Delete for Everyone என்பதற்கு பதிலாக Delete for me கொடுத்துவிட்டால் அதை உடனே Undo செய்து கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது வாட்ஸ் அப் நிறுவனம்.

நண்பர்களுடனும், உறவினர்களுடனும் உரையாடுவதற்கு அதிகமாக நாம் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்துகிறோம். ஆபீஸ் டீம் உரையாடல்களும், நண்பர்களுடனான அரட்டைகளும், வாட்ஸ் அப் குரூப்களிலேயே பெரும்பாலும் நடக்கின்றன. சமயங்களில், வாட்ஸ் அப்பால் நாம் பல்வேறு சிக்கலிலும் மாட்டிக்கொள்வோம்.

வாட்ஸ் அப்பில் சில நேரங்களில், தவறுதலாகவோ அல்லது சரிபார்க்காமல் எழுத்துப் பிழையுடனோ மெசேஜ் அனுப்பி விடுவோம். அல்லது யாருக்கேனும் பிரைவேட் சாட்டில் அனுப்புவதற்குப் பதிலாக, குரூப்பில் அந்த மெசேஜை அனுப்பி விடுவோம். மெசேஜ் அனுப்பப்பட்ட பிறகு கவனித்து உடனடியாக அதனை நீக்க முயற்சிப்போம்.

அப்படி, வாட்ஸ் அப் சாட்டில் நாம் அனுப்பிய மெசேஜை மொத்தமாக அழிக்க நினைத்து, வாட்ஸ் அப்பில் Delete for Everyone என கொடுப்பதற்கு பதிலாக Delete for me கொடுத்துவிட்டால், அந்த மெசேஜ் நமக்கு மட்டும் அழிந்துவிடும். ஆனால், மறு முனையில் உங்கள் மெசேஜை பெற்றவர் அதனை பார்க்க முடியும்.

இப்படியாக, நமது மெசேஜை தவறுதலாக அனுப்பிவிட்டு, அதனை டெலீட் செய்ய நினைத்து, நமது சாட்டில் மட்டும் நீக்கிவிட்டு என்ன செய்வது எனக் கலங்கிப்போய் இருப்போம். அப்படி, வாட்ஸ் அப் சாட்டை திரும்பப் பெற முயன்று தெரியாமல் Delete for me எனக் கொடுத்துவிட்டு வருந்துகிறீர்கள் என்றால், கவலையே வேண்டாம்.

வாட்ஸ் அப் நிறுவனம், Delete for Everyone என்பதற்கு பதிலாக Delete for me கொடுத்துவிட்டால் அதை உடனே Undo செய்து கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. எனவே, இனி அவசரத்தில் Delete for me கொடுத்துவிட்டோமே என கவலைப்படத் தேவையில்லை.

தவறான மெசேஜை அவசரத்தில் டெலீட் ஃபார் மீ கொடுத்துவிட்டால், அதை நாம் நீக்க முடியாத நிலை இருந்த நிலையில், வாட்ஸ் ஆப் நிறுவனம் யூசர்களுக்கு தற்போது தீர்வைக் கொடுத்துள்ளது. அதன்படி, டெலிட் ஃபார் மீ என்ற ஆப்சனைத் தவறுதலாக க்ளிக் செய்தாலும் அதை Undo செய்துகொள்ளும் வசதி தற்போது அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

டெலிட் ஃபார் மீ ஆப்ஷனை க்ளிக் செய்யும் போது திரையில் பாப் அப் வடிவில் Undo ஆப்சன் தோன்றும். Delete For me கொடுத்த பிறகு 5 விநாடிகளுக்கு மட்டு இந்த Pop-up திரையில் தெரியும். இதன்மூலம் Undo க்ளிக் செய்தால், வாட்ஸ் ஆப் சாட்டில் டெலிட் ஃபார் மீ ஆப்சனை தவறுதலாக க்ளிக் செய்தாலும் அதை மீண்டும் மாற்றிக்கொள்ள முடியும்.

5 விநாடிகள் மட்டுமே அந்த Undo பாப் அப் திரையில் தோன்றும் என்பது கவனிக்கத்தக்கது. அதன் பிறகு உங்கள் மெசேஜை திரும்பப் பெற முடியாது. அதற்குள் Undo க்ளிக் செய்து மெசேஜை திரும்பப் பெற்று Delete for Everyone கொடுத்துக் கொள்ளலாம்.

மேலும், Delete for Everyone என கொடுக்கப்பட்டு அழிக்கப்பட்ட மெசேஜை மீண்டும் பெற விரும்பினால் Undo செய்து அதனை பெற முடியாது என்ன்பது குறிப்பிடத்தக்கது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments