திருத்துறைப்பூண்டி கிழக்கு கடற்கரை சாலை புறவழிச்சாலையில் புதிதாக அமைக்கப்பட்ட போக்குவரத்து சமிக்கை விளக்குகளை நேரில் ஆய்வு செய்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்




திருத்துறைப்பூண்டி பகுதியில் விபத்து நடைபெறும் இடங்களை ஆய்வு செய்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின் படி திருத்துறைப்பூண்டி - வேளாங்கண்ணி புறவழிச்சாலையில் புதிதாக போக்குவரத்து சமிக்கை விளக்குகள் அமைக்கப்பட்டது.

புதிதாக அமைக்கப்பட்ட போக்குவரத்து சமிக்கை விளக்குகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார் M.Sc, (Agri)., அவர்கள் இன்று (25.05.2024) நேரில் சென்று ஆய்வு செய்து திருத்துறைப்பூண்டி காவல் ஆய்வாளர் மற்றும் போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஆகியோருக்கு அறிவுரை வழங்கினார்கள்.

மேலும், திருவாரூர், மன்னார்குடி, முத்துப்பேட்டை பகுதிகளில் விபத்து நடைபெறும் இடங்களில் புதிதாக  
போக்குவரத்து சமிக்கை விளக்குகள் அமைக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார் M.Sc, (Agri)., அவர்கள் தெரிவித்தார்கள். 

அப்போது, திருத்துறைப்பூண்டி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.R.சோமசுந்தரம் அவர்கள் உடனிருந்தார்கள்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments