ஆவுடையார்கோவில்லில் மோட்டார் சைக்கிளில் புகுந்த பாம்பால் பரபரப்பு
ஆவுடையார்கோவில் பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதில் கொம்பேறி மூக்கன் பாம்பு ஒன்று தலையை நீட்டிக் கொண்டு இருந்தது இதைப்பார்த்த அருகில் இருந்தவர்கள் பாம்பு, பாம்பு என்று சத்தம் போட்டனர்.
இதையடுத்து மோட்டார் சைக்கிள் உரிமையாளரும் அங்கு வந்தார். அவரும் என்ன செய்வதென்று தெரியாமல் நின்று கொண்டிருந்தார். இதையடுத்து பாம்பு மோட்டார் சைக்கிளுக்குள் சென்று விட்டது. மேலும் அங்கு இருசக்கரவாகனம் பழுது பார்க்கும் மெக்கானிக் வந்தார்.

பின்னர் அவர் மோட்டார் சைக்கிள் சீட்டை கழட்டி எடுத்தார். பின்னர் அதில் இருந்த பாம்பை விரட்டி விட்டனர். மோட்டார் சைக்கிளுக்குள் பாம்பு புகுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments