புதுக்கோட்டை மாவட்டத்தில் கடற்கரை பகுதி 42 கி.மீ., உள்ளது. கடற்கரையோரத்தில் சில இடங்களில் அலையாத்தி காடுகள் உள்ளன. அந்த பகுதிகளில் ஒன்றான, முத்துக்குடா பகுதியில் சுற்றுலா தலம் அமைக்கும் பணி நடைபெறுகிறது.
இப்பகுதியில் தெற்கு வெள்ளாறு கடலோடு கலக்கிறது. அலையாத்தி காடு உருவாக்குவதற்காக கடற்கரை பகுதியில் 1,600 மீட்டர் தொலைவிலும், 91 கிளைகள் பிரிந்து செல்லும் வகையிலும் வடிவமைத்து வாய்க்கால்கள் வெட்டப்பட்டுள்ளன.
மீன் முள்வடிவ தோற்றத்தில் இந்த அலையாத்தி காடு உருவாக்கப்படுகிறது. இதில், 44 ஆயிரம் அலையாத்தி செடி விதைகள் விதைக்கப்பட்டன.
கடந்த ஆண்டில் விதைக்கப்பட்டவை தற்போது நன்கு வளரத் தொடங்கியுள்ளன. அலையாத்தி செடிகள் வளர்ந்து வரும் நிலையில் மரமாகி விரைவில் காட்டின் தோற்றம் அடைந்து விடும்.
அலையாத்தி காடு அடர்த்தியாகக் காணப்படுவதை போல, இந்த பகுதியிலும் அலையாத்தி காடு உருவாகும்.
இதன் வாயிலாக மீன் உட்பட கடல்வாழ் உயிரினத்தை பெருக்க பயனாக அமையும். கடல்நீர் பெருக்கெடுத்து கரைக்கு வர வாய்ப்புகள் குறையும்.
பறவையினங்கள் அதிகம் வந்து தங்குவதற்கு வசதியாக அமையும். வெளிநாட்டு பறவைகளும் வர வாய்ப்பு உள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.