திருத்துறைப்பூண்டி பேரறிஞர் அண்ணா பேருந்து நிலையம் மேம்பாட்டுபணிக்காக மூடல் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நகரில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைப்பு!!திருத்துறைப்பூண்டி பேரறிஞர் அண்ணா பேருந்து நிலையம் மேம்பாட்டுபணிக்காக மூடல் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நகரில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன 


திருத்துறைப்பூண்டி நகருக்கு மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு தேவைகள், பணிகள் நிமித்தமாக செல்லக்கூடிய பொதுமக்களின் கவனத்திற்காக……

திருத்துறைப்பூண்டி நகரில் இயங்கிவந்த 
பேரறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தை மேம்படுத்துவதற்கான பணிகள் துவங்கியிருப்பதால் தற்பொழுது பேருந்து நிலையம் மூடப்பட்டு மேம்பாட்டு பணிகள் துவங்கியுள்ளன இதனால் பொதுமக்கள் வசதிக்காக தற்காலிகமாக நகரில் இரண்டு இடங்களில் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு செயல்பட துவங்கியுள்ளது.

பொதுமக்கள் நலன் கருதி நகரில் வெவ்வேறு இரண்டு இடங்களில்  தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு அங்கிருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

பேருந்துகள் இயக்கப்படும் தற்காலிக பேருந்து நிலையம் மற்றும் பேருந்து விபரங்கள் வருமாறு…

பட்டுக்கோட்டை , திருவாரூர், நாகப்பட்டிணம் ஆகிய பகுதி பேருந்துகள்
விஜிலா தியேட்டர் எதிர்ப்புறம் உள்ள
கால்நடை மருத்துவமனை அருகிலிருந்தும் 

மன்னார்குடி , வேதாரணியம் ஆகிய பகுதி பேருந்துகள் அன்னை தெரசா பள்ளிக்கூடம் அருகில் முன்பு CRC டெப்போ இருந்த இடத்திலிருந்தும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன 


எனவே பொதுமக்கள் திருத்துறைப்பூண்டி பேருந்து நிலைய மாற்றங்களை கவனத்தில்கொண்டு தங்கள் பயணங்கள் மேற்கொள்ளவும்


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments