புதுக்கோட்டை மாவட்டத்தில் பாலைவனமாக காட்சியளிக்கும் ஆறுகள்!



புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆறுகள் பாலைவனமாக காட்சியளிக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் வெள்ளாறு, குண்டாறு, பாம்பாறு, அம்புலியாறு, கோரையாறு உள்ளிட்ட காட்டாறுகள் உள்ளன. இதில் மழைக்காலங்களில் பெய்யும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடும். மேலும் அவ்வாறு பெய்த மழை நீரோட்டமாக தொடர்ந்து ஓடும். 

இந்த நிலையில் கடந்த ஆண்டில் பருவமழை பொய்த்து போனதால் நீர்நிலைகள் நிரம்பவில்லை. அந்த வகையில் காட்டாறுகளிலும் அதிகம் தண்ணீர் ஓடவில்லை. ஒரு சில இடங்களில் தற்போது ஓடை போல நீர் காணப்படுகிறது. ஆனால் நீரோட்டமாக பரந்து விரிந்து ஓடக்கூடிய அளவில் தண்ணீர் இல்லாமல் உள்ளது. 

பூசத்துறை வெள்ளாற்று பகுதியில் மழைக்காலத்தில் பரந்து விரிந்து தண்ணீர் ஓடும். தற்போது தண்ணீர் இல்லாமல் பாலைவனம் போல காட்சியளிக்கிறது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments