மணமேல்குடி மீன் மார்க்கெட்டில் விலை உயர்வு! அதிர்ச்சியில் அசைவ பிரியர்கள்!!



மணமேல்குடி மார்க்கெட்டில் மீன் விலை உயர்ந்துள்ளதால் அசைவ பிரியர்கள் பெரிதும் அதிர்ச்சியில் உள்ளனர்.

மணமேல்குடி மீன் மார்க்கெட்டுக்கு தினசரி விசைப்படகு, நாட்டுப்படகில் பிடிக்கப்படும் மீன்கள், இறால்கள், நண்டுகள் விற்பனைக்கு வருகிறது. இந்த மீன்களை வாங்க வியாபாரிகளும், அசைவ பிரியர்களும் மார்க்கெட்டுக்கு வருகின்றனர். தற்போது மீன்பிடி தடைக்காலம் என்பதால் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் நாட்டுப்படகு மீனவர்கள் மட்டும் கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றனர். வெயிலின் தாக்கம், திசைமாறி வீசும் காற்று உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் நாட்டுப்படகு மீனவர்களுக்கு சரிவர மீன்கள் கிடைப்பதில்லை. இதனால் குறைந்த மீன்களே விற்பனைக்கு வருகிறது. 

மேலும் பள்ளி விடுமுறை என்பதால் வெளியூரில் படிக்கும் மாணவர்கள் விடுமுறையை கழிக்க சொந்த ஊருக்கு வந்துள்ளனர். இதனால் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு அசைவ உணவை சமைத்து கொடுக்க விரும்புகின்றனர். இதனால் மணமேல்குடி கட்டுமாவடி மீன் மார்க்கெட்டை நோக்கி மீன் வாங்க ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். ஆனால் மீன் விலை உயர்வால் செங்கனி, முரல், பாறை போன்ற அனைத்து வகை மீன்களும் கூறு போட்டு வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர். ஒரு கூறு ரூ.500 முதல் ரூ.700 வரை விற்பனையாகிறது. இந்த விலையேற்றத்தால் அசைவ பிரியர்கள் அதிர்ச்சியடைந்து மீன்களை வாங்காமல் திரும்பி செல்கின்றனர். மேலும் சிலர் ஆடு, கோழி இறைச்சிகளை வாங்கி செல்கின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments