நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கூடுதல் மாவட்ட ஆட்சியர் (வளர்ச்சி) திடீர் ஆய்வு!



நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கூடுதல் மாவட்ட ஆட்சியர் (வளர்ச்சி) அப்தாப் ரசூல் திடீர் ஆய்வு செய்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி கோபாலப்பட்டிணம் அவுலியா நகரில் அமைந்துள்ள ஊராட்சி மன்ற அலுவலத்தில் நேற்று 30/04/2024 செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் வரவு, செலவு கணக்குகள் மற்றும் ஊராட்சி செயல்பாடுகள் குறித்து கூடுதல் மாவட்ட ஆட்சியர் (வளர்ச்சி) அப்தாப் ரசூல் திடீர் ஆய்வு மேற்கொண்டார். 
இந்நிகழ்வில் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் பரமசிவன், ஆவுடைர்கோவில் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி ஒன்றிய உதவி பொறியாளர்கள், ஊராட்சி மன்றத் தலைவர், வார்டு உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.

துணை ஆட்சியர் வருகையை அறிந்த மக்கள் தங்கள் அடிப்படை வசதிகள் மற்றும் பல்வேறு குறைகள் குறித்து துணை ஆட்சியரிடம் தெரிவித்தனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments