கோடையில் வீடுபுகும் 'சீசன்' திருடர்கள்: பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டுகோள்! கோபாலப்பட்டிணத்தில் நடந்த சம்பவம்






கோபாலப்பட்டிணத்தில் திருடர்கள் நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணம் அவுலியா நகரில் நேற்று 06/05/2024 இரவு இரண்டு வீடுகளில் திருடர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். வெயில் காலங்களில் வெப்பம் அதிகரிப்பு காரணத்தால் இரவு நேரங்களில் காற்றுக்காக, ஜன்னல், கதவுகளை திறந்து வைத்து தூங்குவதால் இதனை திருடர்கள் சாதகமாக பயன்படுத்துகிறார்கள். இந்நிலையில் அவுலியா நகரில் நேற்று 06/05/2024 இரவு ஒரு வீட்டிற்குள் சென்று சிறிய தொகையையும் மற்றொரு வீட்டிற்குள் சென்று திருட முயன்ற போது வீட்டின் உள்ளே தூங்கிக்கொண்டிருந்தவர் சத்தம் கேட்டு எழுந்து பார்த்தபோது இரண்டு நபர்கள் வேகமாக தப்பி ஓடி விட்டதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். எனவே கோபாலப்பட்டிணம் மக்கள் இரவு நேரங்களில் காற்றுக்காக, ஜன்னல், கதவுகளை திறந்து வைத்து துாங்கும் போது கவனமாகவும், எச்சரிக்கையுடன் இருக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.

கோடைக்காலத்தில் விடுமுறைக்கு ஊருக்குச் செல்வோர், சுற்றுலா செல்வோர், வீட்டைத் திறந்து வைத்து துாங்குவோரை குறி வைத்து திருடும், 'சீசன்' திருடர்களுக்கு பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும்

திருடர்கள் பல வகை. சிலர் பகல் நேரத்தில் மட்டும் தான் திருடுவர்; சிலர் இரவு நேரத்தில் கைவரிசை காட்டுவர். அதேபோல், கோடை காலத்தில் திறந்திருக்கும் வீடுகளில் கிடைத்தவற்றை சுருட்டும், 'சீசன்' திருடர்களும் உள்ளனர்.

இவர்கள் கோடைக்காலம் வந்தால் மட்டுமே கைவரிசை காட்டுவர் என காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

இவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க, ஒவ்வொரு ஆண்டும் கோடைக்காலத்தில் காவல்துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. 

ஆனால் வழக்கம்போல் பொதுமக்கள் அலட்சியமாக இருந்து பொருட்களை தொலைப்பது வாடிக்கையாக உள்ளது.

பகலிலும் உஷாராக இருக்க வேண்டும் என காவல்துறை எச்சரிக்கின்றனர்.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.குறிப்பாக காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை வெயிலின் தாக்கம் உச்சத்தில் உள்ளது. இந்த நேரத்தில் பொதுமக்கள் தேவை இன்றி வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில் பெரிதும் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். வெயிலின் தாக்கத்துடன் அனல் காற்று வீசுவதால் வாகன ஓட்டிகள் திணறி வருகின்றனர். இவர்கள் நிலைமை இப்படி என்றால் வீட்டில் உள்ளவர்கள் நிலைமை இதைவிட மோசமாக உள்ளது. வீட்டில் 24 மணி நேரமும் மின்விசிறி இயங்கி கொண்டே தான் இருக்கிறது.

எனினும் வெப்பம் காரணமாக புழுக்கத்தால் குழந்தைகள், முதியவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். வெயில் தாக்கம் காரணமாக உடலில் நீர் சத்து குறைந்து தோல் சம்பந்தப்பட்ட வியாதிகளும் அதிகரித்து வருகிறது. எனவே நீர் சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments