புதுக்கோட்டையில் புத்தக திருவிழா அடுத்த மாதம் 27-ந் தேதி தொடங்குகிறதுபுதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆகியவை இணைந்து 7-வது புத்தக திருவிழாவை நடத்துகிறது. புதுக்கோட்டை மன்னர் கல்லூரி திடலில் அடுத்த மாதம் (ஜூலை) 27-ந் தேதி தொடங்கி ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி வரை நடைபெறுகிறது.

புத்தக திருவிழா அறிவிப்பு பதாகையை கலெக்டர் மெர்சி ரம்யா வெளியிட்டார். அதனை புத்தக திருவிழாவின் ஒருங்கிணைப்பாளர்கள் பெற்றுக் கொண்டனர்.

விழாக்குழு தலைவராக கலெக்டர் மெர்சி ரம்யா, ஒருங்கிணைப்பு குழுவில் கவிஞர் தங்கம் மூர்த்தி, கவிஞர் முத்துநிலவன், மணவாளன், ராஜ்குமார், பாலகிருஷ்ணன், வீரமுத்து, முத்துக்குமார், விமலா, கவிஞர் கீதா உள்பட பலர் இடம் பெற்றுள்ளனர். மேலும், வழிகாட்டும் குழுவில் போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே உள்பட அனைத்துத்துறை மாவட்ட அலுவலர்களும் இடம்பெற்றுள்ளனர்

பேச்சாளர்கள் கலந்து கொள்வதோடு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான கலை நிகழ்ச்சிகளும், அறிவியல் அறிஞர்களுடன் உரையாடல், அறிவியல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்படவுள்ளன.

`புதுக்கோட்டை வாசிக்கிறது’ நிகழ்ச்சியும், விழிப்புணர்வு ஊர்வலங்களும், மாணவர் போட்டிகளும் ஜூலை 1-ந் தேதி முதல் நடத்தப்படவுள்ளதாக ஒருங்கிணைப்பு குழுவினர் தெரிவித்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments