மீமிசல் அருகே குளத்தில் மூழ்கி 2 வயது சிறுவன் சாவு




மீமிசல் அருகே குளத்தில் மூழ்கி 2 வயது சிறுவன் பரிதாபமாக இறந்தான்.

குளத்தில் மூழ்கிய சிறுவன்

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே உள்ள ஏனாதி கிராமத்தை சேர்ந்தவர் செந்தில் (வயது 40), விவசாயி. இவரது மனைவி மாரியம்மாள் (38). இவர்களுடைய மகன் கஸ்வான் (2). இந்தநிலையில் சிறுவன் தனது வீட்டின் அருகே உள்ள குளத்தில் தாமரை பூவை பறிக்க சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது சேற்றில் இருந்த தாமரை கொடிகள் சிறுவனின் கால்களில் சிக்கியது. இதில், பீதியடைந்த சிறுவன் கஸ்வான் கதறி அழுதான். பின்னர் சிறிது நேரத்திலேயே குளத்தில் மூழ்க தொடங்கினான்.

சாவு

சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று குளத்தில் மூழ்கிய சிறுவனை மீட்டு மணமேல்குடி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவனை பரிசோதித்த டாக்டர்கள் கஸ்வான் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை கேட்ட சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது காண்போரை கண்கலங்க வைத்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments