ராமநாதபுரம் ரெயில்வே மேம்பாலம் பணி ரூ.30¾ கோடியில் 6 ஆண்டுகளாக நடந்து திறப்பு விழாவுக்கு தயார் நிலையில் உள்ளது.
ராமநாதபுரம் மேம்பாலம்
ராமநாதபுரம் ரெயில் நிலையம் அருகே கீழக்கரை சாலையில் ரெயில்வே கேட் பகுதியில் போக்குவரத்து நெருக்கடியை தடுக்க நெடுஞ்சாலைத்துறையின் மூலம் ரூ.30.74 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்டப்பட்டது. மொத்தம் 719.60 மீ்ட்டர் நீளத்திலும், 12 மீட்டர் அகலத்திலும் அமைக்கப்பட்டுள்ள இந்த மேம்பாலத்திற்கான அணுகு சாலை இருபுறமும் சேர்த்து மொத்தம் 379 மீட்டர் நீளம், 5.50 மீட்டர் அகலத்துடனும் அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2018-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு தொடங்கிய இந்த பால பணிகள் நீண்ட தாமதத்திற்கு பின்னர் தற்போது கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் முக்கிய பகுதியான ரெயில்வே தண்டவாள பகுதியில் இருபுறமும் ரெயில்வே நிர்வாகத்தின் சார்பில் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
பாலத்திற்கான கட்டமைப்பு பணிகள் முடிவடைந்து விளக்கு வசதிகள், மின்சார வசதி, தண்ணீர் வெளியேறும் வசதி, பெயிண்ட் அடிக்கும் பணி என அனைத்து பணிகளும் முடிவடைந்து உள்ளன.
திறப்பு விழா
திறப்புவிழா நடைபெற இருந்த நிலையில் தேர்தல் அறிவிக்கப்பட்டு நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் திறப்பு விழா தள்ளிப்போனது. தற்போது தேர்தல் முடிவடைந்த நிலையில் பாலம் திறப்பு விழாவுக்கு தயாராக உள்ளது.
6 ஆண்டுகளாக போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு அதிலிருந்து விடிவு ஏற்படும் வகையில் விரைவில் பாலத்தை திறக்க வேண்டும் என்று பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முன்னதாக ரெயில்வே மேம்பாலம் பணி தொடங்கும் பகுதியில் ராமநாதபுரம் பஸ்நிலையம் மற்றும் ரெயில் நிலையம் அமைந்துள்ளதால் பாலத்தில் ஏறி இறங்கி செல்லும் வாகனங்கள், பஸ்நிலையத்தில் இருந்தும் ரெயில் நிலையத்தில் இருந்தும் வந்து செல்லும் வாகனங்களினால் விபத்துகள் ஏற்படாமல் இருக்க தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.