புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டவிரோத மது விற்பனை குறித்து வாட்ஸ்-அப்பில் தகவல் தெரிவிக்கலாம் கலெக்டர் மெர்சி ரம்யா தகவல்






புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டவிரோத மது விற்பனை குறித்து பொதுமக்கள் வாட்ஸ் அப்பில் தகவல் தெரிவிக்கலாம் என கலெக்டர் மொ்சி ரம்யா தெரிவித்தார்.

சிறப்பு ஆய்வுக்கூட்டம்

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்ததில் 40-க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டவிரோத மது விற்பனை தடுப்பு நடவடிக்கையாக சிறப்பு ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் மெர்சி ரம்யா தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே உள்பட போலீஸ் அதிகாரிகள், வருவாய்த்ஸதுறை அதிகாரிகள் கலந்து கொண்டனர் கூட்டத்தில் கலெக்டர் மெர்சி ரம்யா தெரிவித்ததாவது:-

புதுக்கோட்டை மாவட்டத்தில் சாராயம் விற்பனை மற்றும் போலியான மதுபாட்டில் தயாரித்தல் போன்ற குற்றச்செயலில் யாரும் ஈடுபடாதவாறு தொடர் கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளபபட வேண்டும். மேலும் நகரம் மற்றும் கிராமப் பகுதிகளில் கள்ளத்னமாக மது விற்பனை செய்து பிடிக்–கப்–பட்டு, வழக்குப்பதிவு செய்யப்படும் நபர்கள் மறுபடியும் குற்ற செயல்களில் ஈடுபடுகிறார்களா? என ஆய்வில் கண்டறியப்னபட்டால் அந்த நபர்கள் மீது காவல்துறை மூலம் குண்டர் தடுப்பு சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

மெத்தனால்

புதுக்கோட்டை மாவட்டத்தில் பயன்பாடு இல்லாத அரசு கட்டிடங்கள், கைவிடப்பட்ட, இயங்காத குவாரிகளில் கள்ளத்தனமாக மது மற்றும் போதைப்பொருட்அகள் விற்பனை மற்றும் பயன்பாடு செய்யப்படுவது குறித்தும் போலீசார் திடீர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் கடந்த காலங்களில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்பட்டு அதிக அளவில் வழக்குகள் பதிவு செய்யப்பட்ட கறம்பக்குடி, கந்தர்வகோட்டை, ஆலங்குடி மற்றும் காப்புக்காடுகள் உள்ள பகுதிகளில் தொடர் ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும்.

மேலும் பெயிண்ட் மற்றும் வார்னிஷ் போன்ற பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை செய்யபப்படும் இடங்களில் மெத்தனால் போன்ற போதை உண்டாக்கக்கூடிய பொருட்கள் அதிக அளவு கொள்முதல் அல்லது விற்பனை செய்யப்படுகிறதா? என ஆய்வு செய்யப்பட வேண்டும்.

வாட்ஸ்-அப் எண்

மருந்தகங்களில் அதிக அளவு தூக்கம் மற்றும் போதையை உண்டாக்கக்கூடிய மாத்திரை, மருந்துகள், போதை ஊசி விற்பனை செய்யப்படுகிறதா? என்று தொடர் கண்காணிப்பு செய்யப்பட வேண்டும். கடலோர பகுதிகளில் சட்ட விரோதமாக மது விற்பனை மற்றும் போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? எனவும், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் சட்ட விரோதமாக மது மற்றும் போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? எனவும் தொடர் ஆய்வு செய்யப்பட வேண்டும். மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை மற்றும் போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவது குறித்து 85310 85350 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கூட்டத்தில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முருகேசன், இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் தெய்வநாயகி, இணை இயக்குனர் (மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்) ஸ்ரீபிரியா தேன் மொழி, துணை இயக்குனர்கள் (சுகாதாரப்பணிகள்) ராம் கணேஷ் (புதுக்கோட்டை), நமச்சிவாயம் (அறந்தாங்கி), உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் பிரவீன் குமார், உதவி ஆணையர் (கலால்) வில்சன், மருந்தக ஆய்வாளர் அப்துல் காதர் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்ர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments